CM Stalin Salem Visit : ‘ஆப்ரேசன் கொங்கு’.. முதல்வர் ஸ்டாலினின் சேலம் விசிட்.. திமுகவின் “மாஸ்டர்” பிளான்..!

By Raghupati R  |  First Published Dec 11, 2021, 12:01 PM IST

இன்று சேலத்தில் நடைபெற இருக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.


சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற இருக்கிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ‘வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே இடத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ரூ. 261 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும் 12 அரசு துறைகள் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 38. 52 கோடி மதிப்பிலான 83 திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். 

Latest Videos

undefined

ஆறு அரசு துறைகள் சார்பில் 54 கோடி ரூபாய் மதிப்பிலான 60 பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். சேலம் மாவட்டத்தில் ரிங் ரோடு அமைப்பது, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, ஐடி பூங்கா செயல்பாடுகள், பனமரத்துப்பட்டி ஏரி சீரமைப்பு உள்ளிட்ட பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

உடனடியாக நிறைவேற்ற வாய்ப்புள்ள திட்டங்கள் குறித்தும் சேலத்திற்கு புதிய திட்டங்கள் தொடர்பாகவும் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு செய்தியாளரிடம் தெரிவித்தார். அரசு நலத்திட்ட உதவி உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின், மறைந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா படத்திறப்பு விழாவிலும் பங்கேற்க உள்ளார்’ என்று கூறினார். 

முதல்வர் வருகையையொட்டி சேலம் மாநகரம் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழா போன்று இங்கேயும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. விரைவில் வரப்போகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக எப்படியும் கொங்கு மண்டலத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான் என்று கூறுகின்றனர். கொங்கு மண்டலத்தில் இனி திமுகவின் ஆதிக்கம் ஏற்படுமா ? அல்லது அதிமுகவே ஆதிக்கம் செலுத்துமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!