DMK BJP:ஸ்டாலின் நினைப்பது போல் உள்ளாட்சி தேர்தலை நடத்த விடமாட்டோம்..வெயிட் காட்டும் கராத்தே ..

By Ezhilarasan BabuFirst Published Dec 11, 2021, 11:03 AM IST
Highlights

அதேநேரத்தில் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்கனவே உள்ள திமுக கூட்டணியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கியும், போதிய அறிமுகமும் இருப்பதால் திமுக தலைமையிலான கூட்டணி வலுவான நிலையில் உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சிமன்ற தேர்தலில்  தேதி அறிவிக்கப்பட்டது முதல் குறைந்தது 15 நாட்கள் வாக்கு பதிவிற்கு இடைவெளி விட வேண்டும்  என சென்னை மண்டல பாஜக பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 100% வெற்றி பெறுவோம் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும், அவரது பேச்சு தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். கொரோனா தொற்று காலத்தில் அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்றது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அரசு போதிய அளவுக்கு வேகம் காட்டவில்லை என்ற விமர்சனமும் இருந்துவருகிறது. அதே நேரத்தில் சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற கையோடு சமீபத்தில் நடந்து முடிந்த கிராமபுற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது இந்நிலையில், வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜக எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. 

 சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும், உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான்  என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிகள் தொடர்ந்து பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே முதலமைச்சர் ஸ்டாலினின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுகவை சென்னை மண்டல பாஜக பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில வாரங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய இறுதி பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டார். அதில், சென்னையில் மொத்தம் 61 லட்சத்து 18 ஆயிரத்து 754 வாக்காளர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந் நிலையில் சென்னை மாவட்ட அலுவலர்களுக்கான கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மண்டல பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் கூறியதாவது, விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் டெல்லி தேர்தல் ஆணையம் நவம்பர் மாதம் வெளியிட்டது.  

அதன் அடிப்படையாக வைத்து சென்னை மண்டலத்திற்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் நடக்கும் இறுதி நாட்கள் வரை புதிய வாக்காளர்களை சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இப்போது நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தேர்தல் தேதி அறிவிக்க அடுத்த ஓரிரு தினங்களிலேயே வாக்குபதிவு நடத்தக்கூடாது. நோட்டிபிகேஷன் வெளியிட்ட தினத்தில் இருந்து வாக்கு பதிவிற்கு 10 முதல் 15 நாட்கள் இடைவெளி கொடுக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் கட்சிகளால் தேர்தல் பணிகளை முறையாக செய்ய முடியும்.  ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எதிர் வரும் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 100% வெற்றி என கூறி வருகிறார். அது எந்த வகையிலும் சாத்தியமில்லாத ஒன்று, எனவே அவரது பேச்சு எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அதில் ஏதாவது குளறுபடிகள் நடந்தால் தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. எனவே எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் இவ்வாறு கூறினார்.

அதேநேரத்தில் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்கனவே உள்ள திமுக கூட்டணியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கியும், போதிய அறிமுகமும் இருப்பதால் திமுக தலைமையிலான கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் தேமுதிக கூட்டணியை தாங்கள் கூட்டணிக்குள் இழுக்கா திமுக சார்பில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எதிர்வரும் நகராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. எனவே இறுதி நேரத்தில் சூழல் மாற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

 

click me!