என்னைப் போல் செயல்படுங்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்..!

Published : May 25, 2021, 05:57 PM IST
என்னைப் போல் செயல்படுங்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்..!

சுருக்கம்

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுகப்பு நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தினமும் 35,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும். 

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்துவிட்டால் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

மேலும், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரித்து 24 மணி நேரத்தில் முடிவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை போல தற்போது எடுக்க வேண்டும். வீடு வீடாக சென்று சோதனை நடத்துவதுடன், காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!