சாலையோர மக்கள் உணவின்றி தவிக்க கூடாது.. முதலமைச்சர் உத்தரவு.. அப்படியே செயல்படுத்திய அமைச்சர்.

By Ezhilarasan Babu  |  First Published May 25, 2021, 5:47 PM IST

சாலையோர மக்கள் உணவின்றி தவிக்க கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியதன்படி தினம்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்.  


சாலையோர மக்கள் உணவின்றி தவிக்க கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியதன்படி தினம்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார். 

சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் முன்னிலையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று எழும்பூர் ரயில் நிலையம் பின்புறம் பகுதியில் உள்ள  சாலை ஓரங்களில் வசிக்கும் நூறுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. 

Latest Videos

undefined

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் எவரும் உணவின்றி தவிக்க கூடாது என்ற நோக்கத்தின் உலர் உணவு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி உள்ளோம் என்றார் ,மேலும் செய்தித்தாள்களில் சாலையோரம் வாசிப்பவர்கள் உணவின்றி தவிப்பதாக செய்தி வெளியானது என்றார்.

இதனால், யாரும் உணவின்றி தவிக்க கூடாது என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் இன்று எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி தினமும் சிறப்பாக செய்வோம் என்று கூறினார். மேலும் தினமும் உணவு வழங்கும் இந்த திட்டத்தை கொரோனா பேரிடர் காலம் முடியும் வரை அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

click me!