இரண்டு கட்டங்களாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்..!

By vinoth kumarFirst Published May 25, 2021, 4:47 PM IST
Highlights

மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்து மீண்டும் வீடு திரும்பும் வரை அரசின் பொறுப்பு முழுமையாக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார். 

மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்து மீண்டும் வீடு திரும்பும் வரை அரசின் பொறுப்பு முழுமையாக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார். 

கொரோனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா பரவியதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு நிலவரம் உச்சத்தில் இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. 

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் சி.பி.எஸ்.இ பள்ளியில் பணிபுரிவதால், மாநில அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் விசாக கமிட்டி அமைக்க அரசு ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

12ம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய அரசிடம் இன்று வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், முதலமைச்சரின் ஒப்புதலுக்கு பிறகு அதிலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி 3 தொகுதிகளாக தேர்வு நடைபெறும் என்றும், அதில் எந்தமாற்றமும் இருக்க கூடாது என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறுமா? என்பது குறித்து இன்று மாலை தெரிவிப்பதாக கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்,  ஒரு மாணவர் அல்லது மாணவி தேர்வுக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் தேர்வு மையத்துக்கு வந்து மீண்டும் வீடு திரும்பும் வரை அரசு முழு பொறுப்புடன் செயல்பட வேண்டிய கடமை உள்ளதாகவும் உறுதியளித்தார்.  அதனை எல்லாம் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றம் கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகே தெரிவிக்கப்படும் எனக்கூறினார்.

click me!