பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் நிலை இனி என்னவாகுமோ..? காப்பாற்ற ஆள் இல்லையோ..!

Published : May 25, 2021, 04:42 PM ISTUpdated : May 25, 2021, 05:33 PM IST
பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் நிலை இனி என்னவாகுமோ..? காப்பாற்ற ஆள் இல்லையோ..!

சுருக்கம்

போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த முறை காப்பாற்ற ஜெயலலிதா மேடம் கூட இல்லை


சென்னை, கே.கே.நகர் பகுதியில் இயங்கிவரும் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பணிபுரிந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் எழுந்தது. ராஜகோபாலன் நேற்று கைது செய்யப்பட்டார். ராஜகோபலன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இதுபோன்ற பல ஆசிரியர்கள் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்தார். இதனால் விசாரணை துரித்தப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விவரகாரம் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசுபொருளாகியுள்ளது. இவ்வளவு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் இந்த நடவடிக்கைகளை ஏன் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என கேள்வியெழுப்பபடுகிறது. தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் போக்சோ சட்ட விதிமுறைகள் காற்றில் பறந்துவிட்டனவா என்றும் கேட்கப்படுகிறது. குறிப்பாக பாடகி சின்மயி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பலரும் பள்ளியின் உரிமத்தை ரத்துசெய்ய கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுதொடர்பாக பிரபல நடிகர் நிதின்சத்யா வெளியிட்டுள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இந்தவாட்டி இந்த ஸ்கூல்ல செஞ்சிருவாங்க போல. போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த முறை காப்பாற்ற ஜெயலலிதா மேடம் கூட இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்வீட்டின் மூலம் பிஎஸ்பிபி பள்ளியின் கடந்த காலங்கள் அவ்வளவு உவப்பானதாக இல்லை என்பது புலப்படுகிறது. ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அரசியல் அதிகாரத்தால் அதனை மூடி மறைத்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையிலும் பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என போலீசார் கூறும்போது மேலும் சந்தேகம் வலுக்கிறது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!