
ஆண்டாள் விவகாரத்தை முன்வைத்து சோடா பாட்டில் வீசுவோம்; கல்லெறிவோம் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வன்முறையை தூண்ட முயற்சிகள் தொடங்கியுள்ளனவா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஆண்டாள் தொடர்பாக ஆய்வாளர் கருத்தை கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டியதையடுத்து அவர் அவதூறாக பேசிவிட்டார்; இழிவுபடுத்திவிட்டார் என ஒரு சமூகத்தினர் கொந்தளித்தனர். இதையடுத்து வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.
ஆனாலும் வைரமுத்து குடும்பத்தை மிக இழிவாக விமர்சித்தனர். இதனால் சொல்லாத சொல்லுக்கு பழியேற்கிறேனே என உருக்கமாக வைரமுத்து மீண்டும் வீடியோ மூலம் விளக்கம் அளித்திருந்தார்.
இருப்பினும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சந்நிதியின் மண்டியிட்டு வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் பேசிய ஜீயர் சடகோப ராமானுஜம், எங்களுக்கும் கல்லெறியவும் தெரியும்; சோடா பாட்டில்கள் வீசவும் தெரியவும் என வன்முறையை தூண்டும் வகையில் ரௌடி மாதிரியான பேசி அனைவரையும் தெரிக்கவிட்டுள்ளார் ஜீயர் சடகோப ராமானுஜம்.