விளம்பர வெறியா ? மரபுகளை உடைத்தாரா ? குடியரசு தினவிழாவில் சர்ச்சையில் சிக்கிய பிரதமர் மோடி !!

 
Published : Jan 27, 2018, 11:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
விளம்பர வெறியா ? மரபுகளை உடைத்தாரா ? குடியரசு தினவிழாவில் சர்ச்சையில் சிக்கிய பிரதமர் மோடி !!

சுருக்கம்

republic day function Modi in rajpath

டெல்லியில் நேற்று  நடைபெற்ற குடியரசு தினவிழவில்  அணிவகுப்பு முடிந்த பின்னர் பிரதமர் மோடி ராஜ்பாத்தில் இறங்கி சென்று, பொது மக்களை நோக்கி கையசைத்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மரபுகளை உடைத்தெறிந்தார் பிரதமர் என பாஜகவினர் இதை கொண்டாடிவரும் நிலையில் உங்கள் விளம்பர வெறிக்கு ஒரு அளவே இல்லையா சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இந்தியாவின் 69வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஆசியான் நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், முப்படையினரின் அணிவகுப்பு நடந்தது. இதனை ஜனாதிபதி, பிரதமர், ஆசியான் நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டனர்.

விழாவில் காவி, சிவப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட தலைப்பாகை அணிந்திருந்த பிரதமர் மோடி, அணிவகுப்பு முடிந்த பின்னர் மரபுகளை மீறி, விழா மேடையிலிருந்து கீழே இறங்கி  ராஜ்பாத்திற்கு தனது பாதுகாவலர்களுடன் வந்தார். தொடர்ந்து விழாவிற்கு வந்திருந்த மக்கள் அருகில் சென்று, அவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.

பொதுவாக குடியரசு தினவிழாவன்று கொடியேற்றவது, விருதுகள் வழங்குவது என குடியரசுத் தலைவர்தான்  அன்று ஹீரோவாக இருப்பார். கிடத்தட்ட அன்று நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிரதமர் உள்ளிட்ட யாரும் வெறும் பார்வையாளர்களே..

முன்னாள் பிரதமர்கள்  நேரு, லால் பகதூர் சாஸ்திரி தொடங்கி மன்மோகன் சிங் வரை அனைவருமே இதை உணர்ந்து செயல்பட்டனர். தங்களது பதிவிக்குரிய கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் மரபுகளை மீறாமல் நடந்து கொண்டனர்.

ஆனால் நேற்று டெல்லியில்நடந்த கூத்து இருக்கிறதே தலையில் அடித்துக் கொள்ளலாம் டைப்தான் என குற்றம்சாட்டியுள்ள சமுக ஆர்வலர்கள், அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில் தேசியக் கொடி கலரில் தலைப்பாகை கட்டிக்கொண்டு, தேர்தல் பிரச்சாரம் செய்வதுபோல் இரண்டு பக்கமும் பொது மக்களைப் பார்த்து தனது கரங்களை அசைத்து அவர் நடந்துகொண்ட கொடுமை அனைவரையுமே முகம்சுளிக்கவைக்கும் ரகமாவே இருந்தது என்கின்றனர்.

எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விவஸ்தைகூட இல்லாமல் பிரதமர் நடந்து கொண்டது அநாகரீகம் என்றும் இது அவருக்கு உள்ள விளம்பர வெறிதான் எனவும் சதுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு வரை  குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி இருந்தவரை சற்று அடக்கி வாசித்த மோடி, தற்போது ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டதால் தனது இஷ்டம்போல் செயல்படுகிறார் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!