சோடா பாட்டில் வீசுவோம் என ஜீயர் நல்ல அர்த்ததில்தான் சொல்லியிருப்பாராம்… சொல்றது மத்திய அமைச்சர் !!

Asianet News Tamil  
Published : Jan 27, 2018, 12:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
சோடா பாட்டில் வீசுவோம் என ஜீயர் நல்ல அர்த்ததில்தான் சொல்லியிருப்பாராம்… சொல்றது மத்திய அமைச்சர் !!

சுருக்கம்

Jear sadakoba ramanujam speech soda bottle support Ponnar

இந்து மதம் குறித்து அவதூறாக பேசினால் இனி சோடா பாட்டில் கூட தயங்கமாட்டோம் என ஜீயர் சடகோப ராமானுஜம் நல்ல அர்த்ததில்தான் பேசியிருப்பார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வைரமுத்துவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர், ஆண்டாளை அவமதித்த  கவிஞர் வைரமுத்து வரும் 3 ஆம் தேதிக்குள் ஆண்டாள் கன்னதியில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் மீண்டும் உண்ணா விரதம் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.

தொடா்ந்து பேசிய அவர்,  கற்களை எறிவதற்கும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும். ஆனால் நாங்கள் அதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்தார். .

சாமியார்கள் என்றால் ஒன்றும் செய்ய மாட்டார்க்ள்  என்று நினைக்க வேண்டாம் என்றும் தொடா்ந்து இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை  யாராவது  பேசினால் நாங்களும் சோடா பாட்டில் வீச தயங்க மாட்மோம் என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மதம் குறித்து அவதூறாக பேசினால் சோடாபாட்டில் வீச தயங்க மாட்டோம் என ஜீயர் நல்ல அர்த்தத்தில்தான் சொல்லியிருப்பார் என குறிப்பிட்டார்.

மேலும் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், முண்டாள் எனது தாயார் என கூறிய கவிஞர் வைரமுத்து, பின்னர் ஏன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மன்னிப்புக் கேட்க தயங்குகிறார் என கூறினார்.

தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்படும் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததால்  அவர் எழுந்திருக்கவில்லை என்றும், மதில் ஒன்றும் தவிறிலை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு வாக்குறுதி கொடுத்த இபிஎஸ்... வேட்டு வைக்கும் ராமதாஸ்..! அதிமுகவுக்கு ரூட் கொடுக்கும் திருமா..!
சீட்டு வாங்கி கொடுத்த ஓபிஎஸ்க்கு ஆப்பு வைத்த எம்பி தர்மர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்..