வழக்கறிஞர்களை துள்ளி குதிக்க வைக்கும் செய்தி.. சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வெளியிட்ட தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jun 30, 2021, 9:50 AM IST
Highlights

கொரோனா இரண்டாவது அலை தணிந்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தணிந்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டவது அலை பரவத் துவங்கிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ளநீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. 

நீதிமன்றங்களுக்கு வழக்கறிஞர்கள் நுழைவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வைரஸ் தொற்று தணிந்து, அதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகளுடன் உரடங்கு நடைமுறையில் இருந்து வந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் செயல்பட துவங்கியுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டாலும், அதற்கான முன்னெச்சரக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 

நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நுழைவது கட்டுப்படுத்தப்பட்டது சம்பந்தமாக, உயர் நீதிமன்ற பதிவுத்துறை பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, கொரோனா இரண்டாவது அலை தணிந்து வரும் நிலையில், தமிழகத்தில் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறி, வழக்கை முடித்து வைத்தார்.  

 

click me!