ஹஜ் நிதியை இந்து மாணவிகளின் படிப்புக்கு பயன்படுத்த வேண்டும்… தொக்காடியாதான் சொல்றார் !!

 
Published : Jan 17, 2018, 09:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ஹஜ் நிதியை இந்து மாணவிகளின் படிப்புக்கு பயன்படுத்த வேண்டும்… தொக்காடியாதான் சொல்றார் !!

சுருக்கம்

Haj subsidy money will be spend for Hindu girls education

ஹச் புனித பயணத்துக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ததால் கிடைக்கும் நிதியை இது மாணவிகள் படிப்புக்கு பயன்படுத்த வேண்டும் என விஷ்வ இந்து பரீஷத் அமைப்பின் தலைவ் பிரவின் தொக்காடியா தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட மானியத் தொகையானது பெண் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஹஜ் மானிய ரத்தில் கிடைக்கும் நிதியை இந்து மாணவிகள் படிப்பிற்கு பயன்படுத்துங்கள் என விஸ்வ இந்து பரிஷத்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா,மத்திய அரசு ஹஜ் மானியத்தை ரத்து செய்ததை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மிகவும் காலதாமதமான நல்ல முடிவு என்றும் அவர் தெரிவித்தார்.

இந்துக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்த தொக்காடியா, . இதில் கிடைக்கும் நிதியை ஏழை இந்து மாணவிகளின் கல்விக்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ராமர் கோவில் கட்டவும், பசு வதையை தடுக்கவும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக பிரவீன் தொக்காடியா தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!