ஹஜ் மானியம் ரத்து ! இஸ்லாமியர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்… முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் கொதிப்பு !!

 
Published : Jan 17, 2018, 07:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ஹஜ் மானியம் ரத்து ! இஸ்லாமியர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்… முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் கொதிப்பு !!

சுருக்கம்

Haj subsidy cancel.Islamic people oppose the central govt

ஹஜ் மானியம் என்ற பெயரில்  இது வரை இஸ்லாமியர்கள்தான் ஏமாற்றப்பட்டு வருவதாகவும், ஏர்இந்தியாவின் நஷ்டத்தை சரிசெய்யவே  இது வரை அரசு மானியம் பயன்பட்டதாகவும் த்தை பயன்படுத்துகிறது அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற  உத்தரவின்படி மத்திய அரசு ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட மானியத் தொகையானது பெண் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின்  இந்த முடிவுக்கு  ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இது குறித்து கருத்துத்தெரிவித்த அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரிய பொது செயலாளர் மவுலானா வாலி ராஹ்மானி, ஹஜ் பயணத்திற்கு சென்ற இஸ்லாமியர்களுக்கு மானியம் கொடுக்கப்படவில்லை, மாறாக நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் ஏர்இந்தியாவிற்குதான் மானியமாக வழங்கப்பட்டது என கிண்டல் செய்தார்.

ஹஜ் பயணத்திற்கான மானியம் என கூறி இஸ்லாமியர்கள்தான் ஏமாற்றப்பட்டனர் என்றும் இது ஒரு கண் துடைப்பு மட்டும்தான்  எனவும் அவர் கூறினார். சாதாரண நாட்களுக்கு சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ள டிக்கெட் கட்டணம் ரூ. 32 ஆயிரம் மட்டும்தான். இதுவே ஹஜ் பயண நாட்களில் ஹஜ் பயணிகளிடம் ஏர்இந்தியா ரூ. 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கட்டணம் வசூலிக்கிறது என மவுலானா தெரிவித்தார்.

மானியம் இல்லையென்றால் கட்டணம் குறைவாக இருக்கும். ஹஜ் செல்லும் இஸ்லாமியர்கள் ஏர் இந்தியாவில் மொத்தமாக டிக்கெட்களை வாங்குகிறார்கள், ஆதலால் அவர்களுடைய கட்டணம் குறைவாக இருக்கும். சர்வதேச விமான போக்குவரத்து சங்க விதிமுறைகளின்படி  யாராவது புனித பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு கட்டண தொகையில் 40 சதவிதம் தள்ளுபடி வழங்க வேண்டும். கட்டணம் மிகவும் குறையவில்லை என்றாலும், கட்டணம் வழக்கமான நாட்களில் வசூலிப்பதாக இருக்கும் எவும்  உள்ளார் மவுலானா வாலி ராஹ்மானி தெரிவித்துள்ளார்..

ஏர்இந்தியாவின் நஷ்டத்தை சரிசெய்யவே அரசு மானியத்தை பயன்படுத்துகிறது. ஆனால் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஏழைகள் அதனை இனி தொடர முடியாது எனவும் மவுலானா வருத்தம் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!