H.Raja:திகார் சிறைக்கு சென்றுவந்த நீயெல்லாம் பிரதமரை விமர்சிக்க தகுதியே இல்லை.. ப.சி. மானத்தை வாங்கிய H.ராஜா.!

By vinoth kumarFirst Published Dec 2, 2021, 6:31 AM IST
Highlights

எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது வெள்ளத்தால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என கேட்டார். இவரது ஆட்சியில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே வழங்குவதாக அறிவிக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக அவர் அறிவித்த தொகையை தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். 

திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இது குறித்து கேட்டால் நிதி அமைச்சர் தியாகராஜன் இதற்கான தேதியை சொல்லவில்லை என கூறுகிறார் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா;- எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது வெள்ளத்தால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என கேட்டார். இவரது ஆட்சியில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே வழங்குவதாக அறிவிக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக அவர் அறிவித்த தொகையை தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- Anwar raja: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா திமுகவில் இணைகிறாரா? பரபரப்பு தகவல்..!

மேலும், மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை குறைத்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இது குறித்து கேட்டால் நிதி அமைச்சர் தியாகராஜன் இதற்கான தேதியை சொல்லவில்லை என தெரிவிக்கிறார். மக்களை ஏமாற்றும் மோசடி திமுக அரசு நடக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்கும் வரை பாஜக போராடும். திமுக 1967ம் ஆண்டுக்கு பின் ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியால் மாநில அளவில் 10,800 நீர்நிலைகள் அரசால் மூடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- அடிப்பாவி.. 2வது முறையாக கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த தொழிலதிபரின் மனைவி.. அழுது புலம்பும் கணவர்.!

மோடியின் ஆட்சி இருண்ட காலம் என புத்தகம் எழுதுவது முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திற்கு எந்தவித பொருத்தமும் இல்லை. இந்திராணி முகர்ஜி வாக்குமூலப்படி ஊழல் வழக்கில் அவரும், அவரது மகன் கார்த்தி எம்.பி. ஆகியோர் திகார் சிறைக்கு சென்றவர்கள். பிரதமரை பற்றி விமர்சித்து புத்தகம் எழுத அவருக்கு என்ன தகுதி உள்ளது என எச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!