JAI BHIM:ஜெய்பீம் படம் பார்க்க ஆசைப்படுகிறேன்...பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி..!

By Thanalakshmi VFirst Published Dec 1, 2021, 10:06 PM IST
Highlights

தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளதை பெருமையாக நினைப்பதாக கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தெரிவித்தார். மேலும் ஜெய்பீம் படம் இன்னும் பார்க்கவில்லையெனவும் பார்க்க ஆசைபடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
 

தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளதை பெருமையாக நினைப்பதாக கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தெரிவித்தார். மேலும் ஜெய்பீம் படம் இன்னும் பார்க்கவில்லையெனவும் பார்க்க ஆசைபடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

கோவை பாஜக அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சினிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சமீபத்தில் வெளியிடப்பட்ட குடும்ப சுகாதாரத் துறை அறிக்கையில் பெண்களுடைய பாலின விகிதம் அதிகரித்துள்ளது ஆரோக்கியமான விஷயமாக உள்ளது பெண்கள் பல துறைகளில் முன்னறே இந்த அறிக்கை ஒரு முன்னுதாரணம் என்று கூறினார். கோவை மாநகராட்சியில் குப்பை எடுப்பதில் பிரச்சினை அதிகரித்து வருகிறதாகவும் ஒப்பந்த பணிகளை காரணம் காட்டி சுகாதார பணிகளை மாநகராட்சி தட்டி கழித்து வருகிறது எனவும் குற்றச்சாட்டினார். கோவையின் தேவைக்கு ஏற்ப அரசு செயல்படவில்லை என்றும் சாதாரண பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் செயல்படுகின்றனர் என்றும் கூறினார்.  

பெண்கள் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறதாக தெரிவித்தார். பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் பெருமையாக நினைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கான சுகாதார சதவிகிதம் அதிகரித்துள்ளது. வங்கிக் கணக்குகளை பயன்படுத்துவதில் 53 லிருந்து 78 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பெண்கள் கல்வி , சுகாதாரம், பல்வேறு பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.ஜெய்பீம் படம் இன்னும் நான் பார்க்கவில்லை. விரைவில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறிய அவர், வேளாண் சட்டம் எதற்காக திரும்ப பெற்றதற்கான காரணத்தை பிரதமர் தெளிவாக தெரிவித்துள்ளார். சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை வரை செல்வதற்கு மத்திய அரசு வழி செய்துள்ளது. தனி மனித ஒழுக்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதற்கான பணிகளை பாஜக மகளிர் அணி செய்யும் என்று பேட்டியில் கூறினார்.

மேலும் பேசியர் அவர், 120 கோடி மக்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பதில் மாநில அரசுக்கும் பங்கு உள்ளது என்றார். 

உள்ளாட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டுமெனவும் தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறினார். மேலும் எந்தெந்த இடத்தில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என்பதை மற்ற மாநிலத்திற்கும் கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்தார்.

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற அரசு விழாவை அதிமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணித்திருந்தாலும், பாஜக எம்.எல்.ஏ வானதி சினிவாசன் பங்கேற்றதும், முதலமைச்சர் ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

click me!