சீமானா..? அவரு வலது கையில் சாப்பிடுறாரு… இடது கையில்……???? தலையை சிலுப்பும் மன்சூர் அலிகான்

By manimegalai aFirst Published Dec 1, 2021, 9:51 PM IST
Highlights

சென்னை: சீமான் என்ன ரம்பாவா? நக்மாவா? நான் பேசறதக்கு? அவரு வலது கையில் சாப்பிட்டுக்கிட்டு கையை கழுவிட்டு போய்க்கிட்டே இருக்காரு என்று கருத்து கூறி அலப்பறையை கூட்டி இருக்கிறார் மன்சூர் அலிகான்.

சென்னை: சீமான் என்ன ரம்பாவா? நக்மாவா? நான் பேசறதக்கு? அவரு வலது கையில் சாப்பிட்டுக்கிட்டு கையை கழுவிட்டு போய்க்கிட்டே இருக்காரு என்று கருத்து கூறி அலப்பறையை கூட்டி இருக்கிறார் மன்சூர் அலிகான். 

மன்சூர் அலிகானை தெரியாதவர்கள் தமிழக அரசியலை தெரியாதவர்கள் என்று கூறலாம். திரையில் வில்லன்+காமெடியில் வலம் வந்து கவர்ந்தவர். அரசியல் களத்தில் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறார்.

மக்கள் பிரச்சனையில் ஒரு மனிதனின் பொது புத்தியக்கு எது எட்டுமே அதை தான் செய்வேன் என்று தலையை சிலுப்பிக் கொண்டு பிடிவாதமாக பேசுபவர்…. பேசிக் கொண்டே இருப்பவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அவரது நடவடிக்கைகள் பிரபலம். மெரினா பீச்சில் நடந்த போராட்டத்தின் போது கையில் விளக்குமாறை பிடித்துக் கொண்டு ரோட்டை சரக்… சரக் என்று கூட்டி தள்னினார்.

கொரோனா தடுப்பூசியால் விவேக் இறந்த போது ஊசி யாருக்கு வேணும்? விவேக் திரும்பி வருவாரா? என்று அலறவிட்டு பின்னர் நீதிமன்ற படிக்கட்டுகள் ஏறினார்.

இப்போது சென்னையை புரட்டி போட்ட மழையை உலகுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று நினைத்து தமது வீட்டின் அருகே குளம் போல் தேங்கிய தண்ணீரில் பாத் டப்பை மிதக்கவிட்ட படகோட்டியாய் வலம் வந்து அதகளம் பண்ணினார்.

எப்பவும் தலையை சிலுப்பி, சிலுப்பி… வித்தியாசமான உரைநடையில் இவர் பேசும் பேச்சுகளும், நடை, உடை பாவனைகளும் தனி ரகம். மன்சூர் அலிகானின் ஸ்டைலுக்கு என்று அவர் கூறும் விஷயங்களை கேட்பவர்கள் ஏராளம்.

தொடக்க காலத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமானுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர். பின்னர் அக்கட்சியில் இருந்து தமிழ் தேசிய புலிகள் கட்சி என்று புதிய கட்சியை ஆரம்பித்து அரசியலில் பயணித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியில் இருந்த போது தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவர் தனியாக களம் கண்டார்.

தாம் கேட்ட தொகுதியை வழங்காமல், சேப்பாக்கம் தொகுதியை தருகிறார் என்று கூறி நாதகவில் இருந்து விலகினார். ஆனால் அவரது குற்றச்சாட்டை சீமான் மறுத்திருந்தது தனிக்கதை.

இப்போது சென்னை மழை, வெள்ளம், மக்கள் பாதிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்துகள் இப்போது இணைய உலகில் அவரை போன்றே பரபரப்பாகி இருக்கிறது.

அவரின் அதகள பேச்சு இதோ: மழைங்கிறது ஒரு வரம்… அதுவும் இயற்கை கொடுத்த வரம். தாயை பழித்தாலும் தண்ணியை பழிக்கக்கூடாது. பொறந்தா தமிழ்நாட்டில் பொறக்கணும், அதுவும் சென்னையில் பொறக்கணும்.

ஆடி கார், ஸ்கோடா, ஹூண்டாய்னு ஏதேதோ கார் விற்கிறாங்க. மழை பெய்ஞ்சா கார் எல்லாம் சேஸ்சோடு மேலே ஏறணும். அதை கண்டுபிடிங்க. இந்த வெங்காயம், வெள்ளப்பூண்டு கதை எல்லாம் வேண்டாம்.

எல்லாருக்கும் நான் ஒரு ஐடியா சொல்கிறேன். வீடு கட்டும் போது 10 அடிக்கு மேல் காலம்பாக்ஸ் போடுங்க. மழை வந்தா ஜனங்க மாடிக்கு போய்விட போறாங்க. ஏழை,பாழைகள் இதற்காக உதவலாம்.

மழை தண்ணி பள்ளத்தை நோக்கி பாயுது, முழங்கால் வரைக்கு போகுது. ஹாங்காங்கில் மழையிலே வீடு கட்டி இருக்காங்க. அதை சமன்படுத்தணும். பைக், ஸ்கூட்டர் எல்லாம் உயரமாக தயாரிங்க.. அது ரொம்ப சிம்பிள்.

ஜெய்பீம் படத்தில் குறைகள் எதுவும் இல்லை. இன்னமும் சாதி கொடுமை தலைவிரிச்சாடுது. நடிகர் சூர்யாவை பாராட்டணும். சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அவர் நல்லா நடிச்சிருக்கிறாரு. தொழிலில் மரியாதை கொடுத்த நடிச்சிருக்கிறாரு. அப்படித்தான் மாநாடு படமும் ரொம்ப சூப்பர்.

என்னோட கட்சி நடவடிக்கைகள் எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கு… ஒட்டகம் மாதிரி அப்படியே அமைதியா இருக்கு.. பாயும் போது பாயும். சீமானோடு இருக்கணும் மாதிரி எல்லாம் பிரச்னை கிடையாது.

அவரு வலது கையில் சாப்பிடுறாரு.. கைய கழுவுறாரு அந்த மாதிரி தான் போய்க்கிட்டு இருக்காரு. சீமான் என்ன ரம்பாவா? நக்மாவா? பேசறதுக்கு.. அவர் ஒரு தலைவர்… 30 லட்சம் பேர் காசு வாங்காமா ஓட்டு போட்டு இருக்காங்க… பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன், எதுவும் நடக்கலாம் என்று கூறி அதகளம் பண்ணி இருக்கிறார் மன்சூர் அலிகான்….!!

click me!