ஆமா…! ஆளுநருக்கு அதிகாரம் இருக்குன்னு சொல்றேன்… திமுகவை சீண்டும் ஹெச். ராஜா…

By manimegalai a  |  First Published Oct 28, 2021, 6:30 AM IST

தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் தலையிடுவதற்கு ஆளுநருக்கு சட்டத்தில் இடம் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கூறி உள்ளார்.


தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் தலையிடுவதற்கு ஆளுநருக்கு சட்டத்தில் இடம் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கூறி உள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

தமிழக அரசியல் களம் இப்போது ஆளுநர் அதிகாரம் என்ன என்பதை நோக்கி திரும்பி இருக்கிறது. அனைத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டு வைத்தது தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பி வைத்த கடிதம் தான்.

அனைத்து துறை செயலாளர்களுக்கும் அவர் ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் அரசு செயல்படுத்தும் திட்டங்கள், அதன் தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்களை பவர் பாயிண்ட் பிரச்ன்டேஷன் மூலம் தயார் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இதோடு? திட்ட விவரங்கள் பற்றி ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்க செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், அதற்கான காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார். அவரின் கடித விவரங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையில் கொண்டு போய்விட்டது.

ஒரு மாநில அரசின் செயல்பாடுகளில் சுதந்திரத்தில் ஆளுநரின் தலையீடு என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஒரு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைக்கும் முயற்சி, ஆட்சி அதிகாரத்தில் தலையிடுகிறார் என்று பொங்கி எழுந்தார்.

ஆனால் திமுகவோ இந்த விவகாரத்தில் மவுனமாகவே இருந்தது, வேறுவித சந்தேகங்களுக்கும் வழி வகுத்தது. இந்த தருணத்தில் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் உறுதியாக இருப்பதாக விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறி தெளிவுபடுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

ஒருவழியாக பிரச்னை முடிந்ததாக அனைவரும் கருதிய நிலையில் ஆளுநருக்கு மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட சட்டத்தில் இடம் இருக்கிறது என்று கொளுத்தி போட்டியிருக்கிறார் பாஜக தலைவர் ஹெச் ராஜா.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா. பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:

நகர்ப்புற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தான் மிக பெரிய வெற்றி பெறும். தமிழக அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடலாம், அதற்கு சட்டத்தில் அதிகாரம் இருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஒன்றும் பெரியவர் அல்ல. அதிமுக நாங்கள் மதிக்கும் கூட்டணி கட்சி. அதன் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று கூறி உள்ளார்.

click me!