கள்ளக்குறிச்சி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள சங்கராபுரத்தில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர் சிகிச்சையில் இருந்தவர்களின் மேலும் ஒருவர் பலியாக உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.
இந் நிலையில் பட்டாசு வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார். நடந்த விவரங்களை கேட்டறிந்த அவர் அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார்.
இது குறித்து விவரத்தை அண்ணாமலை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் நேற்று ஏற்பட்ட பட்டாசு கடை தீ விபத்தில் பாதிக்கப்பட்டோரை இன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
இந்த துயரமான சம்பவத்தில் இருந்து மீண்டு வருவோம் என்கின்ற அவர்களுடைய நம்பிக்கையால் ஆறுதல் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு ஆத்மாக்களும் சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்! மேல் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை @BJP4TamilNadu செய்யும் என்று உறுதியளித்து இருக்கின்றேன்.
தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்திக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் நேற்று ஏற்பட்ட பட்டாசு கடை தீ விபத்தில் பாதிக்கப்பட்டோரை இன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்!
இந்த துயரமான சம்பவத்தில் இருந்து மீண்டு வருவோம் என்கின்ற அவர்களுடைய நம்பிக்கையால் ஆறுதல் அடைந்தேன்!
1/2 pic.twitter.com/Ywp7IcsEJu