எழுவர் விடுதலையில் அரசும், நீதிமன்றமும் ஒரு முடிவெடுத்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் கூறி உள்ளார்.
திருச்சி: எழுவர் விடுதலையில் அரசும், நீதிமன்றமும் ஒரு முடிவெடுத்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் கூறி உள்ளார்.
undefined
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், சிறுபான்மையினர் ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதல்வரின் உத்தரவின் பேரில் மொழி, சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் பிரச்னைகள் குறித்து சிறுபான்மையின ஆணையம் மாவட்ட வாரியாக ஆய்வை மேற்கொண்டு உள்ளது.
வலதுசாரி சிந்தனைய இயக்கம் கொண்ட மதவாத சக்திகளினால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று புகார்கள் வந்துள்ளன. ஒரு சாரார் தங்களது வெறுப்பு அரசியலை மக்கள் மன்றத்தில் முன்னெடுக்கின்றனர். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக சமூக அமைதி மிகவும் அவசியம்.
அடக்க தலங்களில் குறிப்பாக கிறித்துவ கல்லறைகள் முழுமையாக நிரம்பி அடக்கம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. எனவே சமத்துவபுரம் போன்று சமத்துவ அடக்க ஸ்தலங்களை ஏற்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும்.
அரசானது ஒரு முடிவை எடுத்து அதை நீதிமன்றம் அங்கீகரித்து சிறையில் நீண்ட நாட்கள் இருக்கிறவர்களுக்கு அளவுகோல் ஒன்றை வைத்து 20,25,30 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை எல்லாம் விடுதலை செய்வதாக இருந்தால் விடுவித்துவிட்டு போகட்டும்.
அரசு ஒரு முடிவை மேற்கொண்டு இத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கின்றனர் என்று முடிவெடுத்து வெளியே எடுத்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்கள் மாநில தலைவரும் அதை தான் பேசி உள்ளார்.
தேசிய தலைமையும் அதை தான் கூறி இருக்கிறது. நீதிமன்றம், அரசாங்கம் ஒரு முடிவை எடுத்தால் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று பீட்டர் அல்போன்ஸ் கூறி உள்ளார்.