பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை திசை திருப்பும் திருமா, சீமான்? விசிகவை தடை செய்ய வேண்டும்- எச்.ராஜா ஆவேசம்

By Ajmal KhanFirst Published Sep 26, 2022, 10:46 AM IST
Highlights

தமிழகத்தில் தேச விரோதிகள்,வன்முறை வாதிகள் துணிச்சலாக இருப்பதற்கு  சீமானும், திருமாவளவனும் தான் காரணம் எனவும் இவர்கள் தான் நாட்டின் தீய சக்திகள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

பிஎப்ஐ அமைப்பினர் கைது

தேசிய புலனாய்வு பிரிவினர் கடந்த வாரம் நாடுமுழுவதும்  பிஎப்ஐ அமைப்பினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.  நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் அடிப்படையில் நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் தமிழகத்தில் இருந்து 11  பேரையும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் அந்த அமைப்பிற்கு ஆதரவாக பல்வேறு பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை..! பாஜகவினரையும் படிக்க வைக்க வேண்டும் - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு

சீமான் அரசியலில் இருப்பதற்கு லாயக்கு இல்லை

இந்தநிலையில் கோவை, நெல்லை, மதுரை என பல்வேறு இடங்களில் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்தில் தேச விரோதிகள் வன்முறை வாதிகள் இவர்கள் துணிச்சலாக இருப்பதற்கு காரணம் சீமானும்,திருமாவளவன் தான் என குற்றம்சாட்டினார்.

இவர்கள் நாட்டின் தீய சக்திகள் என விமர்சித்தார். அரசியலில் இருப்பதற்கு லாயக்கு இல்லாதவர்கள் என்றும் தெரிவித்தார்  பெட்ரோல் குண்டு வீசியவர்கள் பின்னனியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தான் உள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திருமாவளவன், சீமான் எந்த ஜென்மங்கள் என தெரியவில்லை, அவர்கள் தேச விரோதிகள் அவர்கள் இந்த விவகாரத்தை திசை திருப்ப முயல்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

கருணாநிதியை எச்சரித்தேன் கேட்கவில்லை; அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்; சுப்ரமணியன் சாமி

திருமா, சீமான் கைது செய்ய வேண்டும்

கோவையில்  காவல் நிலையத்திற்கு முன்பாக எஸ்டிபிஐ, பிஎப் ஐ போராட்டம் நடத்துகிறார்கள் இவர்களுக்கு உறுதுணையாக இருப்பது விடுதலை சிறுத்தை கட்சி என தெரிவித்தார். எனவே விடுதலை சிறுத்தை கட்சிக்கும் எஸ்டிபிஐ க்கும் வித்தியாசம் இல்லை என கூறினார். எனவே தமிழக அரசாங்கம் விடுதலை சிறுத்தை கட்சியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுக்கு விரோதமான காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவரை கூட்டிவந்து கூட்டம் நடத்தியவர் சீமான் என தெரிவித்தவர்,  எனவே சீமான், திருமாவளவன் என இரண்டு பேரையும் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்

பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..! டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்ட தமிழக ஆளுநர்

 

click me!