தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை. நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என்று தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் ரத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை. நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என்று தெரிவித்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதையும் படிங்க;- ஆளுநர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார்! இது செந்தில் பாலாஜிக்கு எதிரானதல்ல! திமிரும் திருமா..!
இதனிடையே, அறிவிப்பு வெளியாக சில மணி நேரத்திலேயே ஆளுநர் இந்த உத்தரவு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த கடிதம் வெளியாகியுள்ளது.
அதில், செந்தில் பாலாஜி பதவி நீக்கம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு அறிவுறுத்தியுள்ளார். தலைமை வழக்கறிஞரிடம் கருத்தையும் கேட்பது சரியானதாக இருக்கும் என்பதால் அவரை அணுகி கருத்து கேட்க உள்ளேன். ஆகையால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு, என்னிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது ஏன்.? முதல்வருக்கு ஆளுநர் எழுதிய 5 பக்க பரபரப்பு கடிதம்