அனுமதி கொடுத்த அமித்ஷா..? இறங்கி அடித்த ஆளுநர் ரவி- செந்தில் பாலாஜி நீக்கத்தில் திடீர் பின்வாங்கியது ஏன்.?

By Ajmal Khan  |  First Published Jun 30, 2023, 8:54 AM IST

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையேயான மோதல் போக்கு முற்றியுள்ளது. நீயா நானா என்ற போட்டியில் தமிழக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய பின்னர் அடுத்த 5 மணி நேரத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக தனது முடிவு நிறுத்திவைத்துள்ளார். 


செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுநர்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென ஏற்கனவே ஆளுநர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினோ முடியாது என அறிவித்திருந்தார்.  அடுத்த ஓரிரு நாட்களிலேயே அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென ஆளுநர் ரவி மீண்டும் வலியுறுத்தினார். அதற்கும் முடியவே முடியாது என்று தெரிவித்த ஸ்டாலின் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்தார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அப்போதே ஆளுநர் ரவி அதிரடியாக அறிவித்தார்.

Tap to resize

Latest Videos

டெல்லி சென்ற ஆளுநர் ரவி

இந்த நிலையில் தான் டெல்லிக்கு சென்ற ஆளுநரவி மத்திய அரசின் சட்ட ஆலோசகர் ரோடு ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளையும் சந்தித்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்று விசாரித்துள்ளார் . ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக ஒரு பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து தான் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ரவி உத்தரவிட்டுள்ளார் . அமித்ஷாவின் கண்ணசைவு இல்லாமல் இது போன்ற நடவடிக்கையை ஆளுநர் எடுத்திருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி கைது செய்யபட்ட உடனே முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவை எச்சரிக்கும் வகையில் நாங்கள் திருப்பி அடித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் யார் திருப்பி அடிக்கிறார்கள் என்ற போட்டியில் மத்திய அரசு ஆளுநருக்கு அதிகாரத்தை கொடுத்து தற்போது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

ஆளுநர் உத்தரவு திடீர் நிறுத்தம் ஏன்.?

ஆனால் ஆளுநரின் இந்த உத்தரவு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரை நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச்சருடைய அதிகாரம் இதில் ஆளுநர் தலையிட எந்தவித சட்டமும் இல்லை. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தால் நாடு முழுவதும் ஆளுநர் தனக்கு வேண்டாதவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வாய்ப்பாக மாறி விடும். எனவே தமிழக ஆளுநரின் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவால் ஆளுநர் தற்போது அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்க உத்தரவை நிறுத்தி வைத்தாக கூறப்படுகிறது.

 ஆனால் இந்த பிரச்சனை தற்போது முடிந்துவிடவில்லை அடுத்த கட்டமாக நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை நடத்த திமுக அரசு களம் இறங்க உள்ளது. நீதிமன்றத்தில் ஆளுநரா.? தமிழக அரசா.? என்ற போட்டியில் வெற்றி கிடைக்கப் போவது யாருக்கு..?என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்

34 மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு!பதவியில் இருந்து நீக்க கடிதம் எழுதுவீங்களா?ஆளுநரிடம் கேள்வி எழுப்பும் திமுக

click me!