திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டுள்ளது.! உள்நோக்கத்துடன் மாற்றி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது- R.N.ரவி

By Ajmal Khan  |  First Published Oct 7, 2022, 1:25 PM IST

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த G.U போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். அதீபகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் G.U போப் இதற்கான அர்த்தத்தை புரிந்து இருந்தாலும் PRIMAL DEITY என எழுதியுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 


சென்னை அண்ணா பல்லைக்கழகத்தில் நடைப்பெற்ற திருக்குறள் மாநாடு 2022ல் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் தனக்கு திருக்குறள் புத்தகம் தான் முதலில் வழங்கப்பட்டதாகவும்,  ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தை புரிந்து வாசித்து வருவதாக கூறினார்.  திருக்குறள் நூல் பக்தியுடன் துவங்கி, ஐந்து புலன்களை எப்படி கட்டுப்படுத்துவது அதன் மூலம் எப்படி ஒருவன் தன் வாழ்நாளில் பிறந்தது முதல் இறப்பு வரை எப்படி வாழ முடியும் என்பது குறித்து பேசுகிறது . ஆனால் திருக்குறளை வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் கூறி வருகின்றனர். திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை.

அப்போ ஒரு பேச்சு..இப்போ ஒரு பேச்சு...திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்மையின் மறுஉருவம்.! ஸ்டாலினை சீண்டும் ஓபிஎஸ்

Tap to resize

Latest Videos

திருக்குறள் நூலை பல்வேறு நபர்கள் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர், இதன் மூலம் திருக்குறள் அர்த்தங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆன்மிகம் தான் இந்தியாவின் ஆணி வேர் என்பதை யாரும் பேசவில்லை,இந்த பிரச்சினை வெள்ளையர்கள் காலத்தில் துவங்கியது. குறிப்பாக இந்த குரலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த G.U போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். அதீபகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் G.U போப் இதற்கான அர்த்தத்தை புரிந்து இருந்தாலும் PRIMAL DEITY என எழுதியுள்ளார்.

எய்ம்ஸ்காக இபிஎஸ் காட்டிய நிலம் இங்கே..! செங்கலை காட்டிய உதயநிதி எங்கே..? ஆர் பி உதயகுமார் கேள்வி

திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து இந்த புத்தகம் பேசுகிறது. ஆனால் இந்த புதக்கத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த புதக்கதை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் இது தெரியும். இந்தியா வளர்ந்து கொண்டு உள்ளது, இந்தியா வளரும், 2047ஆம் ஆண்டு இந்தியா உலக வல்லரசாக மாறும். வெறும் பொருளாதார அளவில் மட்டும் நாம் வளர கூடாது, நாடு வளர வளர ஆன்மிகமும் வளர வேண்டும். திருக்குறலுக்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் அதனை யாராலும் தடுக்க முடியாது, உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளி வந்தே தீர வேண்டும். திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட புதக்கங்களை நான் படித்தேன் ஆனால் திருக்குறளின் உண்மை நிலையை அந்த புதக்கங்கள் பேசவில்லை எனவே திருக்குறளின் புத்தக்கதை முழுமையாக மொழி பெயர்க்க வேண்டும் என பேசினார்.

click me!