மருந்து இல்லன்னா அரசுதான் பொறுப்பு.. டாக்டர்கள் கிட்ட சீன் போடலாமா.? அமைச்சர்களை கழுவி ஊற்றிய ஆம்ஆத்மி.

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2022, 12:23 PM IST
Highlights

அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லாததற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், மருத்துவர்களை அமைச்சர் பணி இடமாற்றம் செய்தது ஏற்கத்தக்கது அல்ல என்றும் ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். விவரம் பின்வருமாறு:-
 

அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லாததற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், மருத்துவர்களை அமைச்சர் பணி இடமாற்றம் செய்தது ஏற்கத்தக்கது அல்ல என்றும் ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். விவரம் பின்வருமாறு:-

வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை என்ற ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூத்த அமைச்சர் திரு. துரைமுருகன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவர்களிடம் பாம்பு கடிக்கு மருந்து (ASV) இருக்கிறதா என கேட்ட போது மருத்துவர்கள் இல்லை என சொல்லியுள்ளனர். மருந்து இல்லாததற்கு அங்கு பணியிலிருந்த வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 2 மருத்துவர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிடுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  ஓட்டு வங்கிக்காக ஆன்மிக அரசியல் பேசும் ஸ்டாலின்.. முதலில் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுங்க.. VP.துரைசாமி

மேலும் அங்கு எக்ஸ்ரே வசதி இல்லை என்றும், மருத்துவமனை கட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதாகவும் அதற்கு  மருத்துவர்கள் மீது சுகாதார அமைச்சர் குற்றம் சுமத்தி உள்ளார். மூத்த அமைச்சர் திரு துரைமுருகன் அவர்கள் மருத்துவர்கள் மனம் வருதும்படி பேசியிருப்பதும் வருந்ததக்கது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாகவே ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து, மாத்திரைகள் இல்லை என்ற தகவல் இருந்து வருகிறது. இந்த நிலையில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மருந்து இல்லாததற்கு, மருத்துவர்களை தண்டிப்பது தவறு.

இதையும் படியுங்கள்: நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் என்ஐஏ திடீர் சோதனை..! அதிர்ச்சியில் சீமான் ..! என்ன காரணம் தெரியுமா??

இதே பொன்னை (ஆசுநி) மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 3 மருத்துவர்கள் தான் பணி புரிகிறார்கள். அரசு மருத்துவர் பணியிடங்கள் பல இடங்களில் காலியாக உள்ளதால் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. மேலும் மருத்துவர்களின் உரிய ஊதியத்திற்காக பத்து வருடங்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். மருத்துவம் என்பது நீண்டகால படிப்பு, அரசுப் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், குடும்பத்தை பிரிந்து நெடுந்தொலைவில் பணிபுரிதல் என மனஉளைச்சலுடன் உள்ள மருத்துவர்களை, மூத்த அமைச்சரே கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க என்று சொல்வது சரியில்லை. 

மருத்துவமனைக்கு தேவையான கட்டிடம், மருந்துகள், உபகரணங்கள், தேவைக்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் இவைகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை இவைகளை சரியாக செய்துவிட்டு தவறு இருந்தால் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவர்களின் சேவையின் தேவை கொரோனா காலத்தில் நம் அனைவருக்கும் புரிந்திருக்கும். ஆகவே அமைச்சர்கள் மாண்புமிகு திரு. துரைமுருகன் திருமா.சுப்ரமணியன் ஆகியோரின் அதிரடி சோதனையின் போது பெண்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை தண்டிப்பது நியாயம் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக குளறுப்படிகளே இதற்கு காரணம்.

இதை கருத்தில் கொண்டு திமுக அரசு மருத்துவர்களை பழிவாங்குவதை தவிர்த்துவிட்டு சுகாதார துறையே மருந்து மாத்திரைகள் தயாரித்து செலவினங்களை குறைத்தல், பணிமாற்ற கலந்தாய்வுகளை நியாமாக நடக்க செய்தல், கட்டுமான வசதிகளை பெருக்கிடுதல் போன்றவற்றை செய்து சுகாதார பயன்கள் மக்களுக்கு எளிதில் கிடைத்திட வழிவகைகள் செய்திட வேண்டும் என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!