திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி உள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் நான் விலகியபோது பல்வேறு கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டேன். தற்போது மேலும் ஒருவர் விலகியிருப்பது திமுக தலைமைக்கும், தொண்டர்களுக்குமான நெருக்கம் குறைந்து வருவதை காட்டுகிறது.
அரசுத்துறை அதிகாரிகளையும், பொதுமக்களையும் அமைச்சர்கள் கேலியாக பேசுவது தொடர் கதையாக உள்ளது. முதலமைச்சரின் கட்டளையை யாரும் மதிப்பதில்லை என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ;- திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி உள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் நான் விலகியபோது பல்வேறு கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டேன். தற்போது மேலும் ஒருவர் விலகியிருப்பது திமுக தலைமைக்கும், தொண்டர்களுக்குமான நெருக்கம் குறைந்து வருவதை காட்டுகிறது.
இதையும் படிங்க;- பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம்.. அதிமுகவை துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி.. செல்லூர் ராஜூ
ஓட்டு வங்கிக்காக ஆன்மிக அரசியல் பேசும் , முதலில் விநாயகர் சதுர்த்திக்கும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கும், தமிழக மக்களுக்கு வாழ்த்து கூறட்டும். தமிழகத்தில் அதிகாரிகளையும், பொதுமக்களையும் அமைச்சர்கள் கேலி கிண்டல் செய்வது அதிகரித்துள்ளது. முதல்வரின் பேச்சுக்கு அமைச்சர்கள் யாரும் கட்டுப்படுவதாக தெரியவில்லை.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது சட்டத்தை மீறிவததாக உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத நல்லிணக்கதத்தை வலியுறுதத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர்.
தமிழகத்தில் மத நல்லிணக்கம் நன்றாக இருக்கும் போது மனித சங்கலி எதற்கு என்று தெரியவில்லை. அதனால் தான் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், பாஜகவின் கொள்கைகளை ஏற்று உறுப்பினராக இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருவதாக கூறி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தாலே, வெடிகுண்டு கலாசாரம் பரவுவது வாடிக்கை தான் என வி.பி.துரைசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க;- வாயில் வடை சுட்டது போதும்... இப்ப காட்டுங்க உங்க சமூகநீதியை... ஸ்டாலினை வாண்டடா வம்பிழுக்கும் V.P துரைசாமி.