ஆளுநர் நடுநிலைமை தவறாமல் செயல்படுகிறார்; வைகோ கருத்து!

Asianet News Tamil  
Published : Oct 02, 2017, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
ஆளுநர் நடுநிலைமை தவறாமல் செயல்படுகிறார்; வைகோ கருத்து!

சுருக்கம்

Governor of true neutrality - Vaiko

ஆளுநர் வித்யாசாகர் ராவை, மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் நவோதயா பள்ளிக்கு அனுமதி அளிக்காத நிலையில், தற்போதைய எடப்பாடி அரசு  அதனை அனுமதிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

சென்னை, காமராஜர் அரங்கில் மதிமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு உடத்த உள்ளதாகவும் இந்த மாநாட்டில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரவித்தார்.

செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு வைகோ, சில மணி நேரங்களில் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார்.

மேலும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், நடுநிலை தவறாமல் செயல்படுவதாகவும், இது தன்னுடைய கருத்து என்றும் வைகோ கூறினார்.

PREV
click me!

Recommended Stories

Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!
பதவியேற்ற முதல் நாளே ராஜினாமா செய்த விஜய்..! திருச்சி கிழக்கில் மீண்டும் இடைத் தேர்தல்..