மகளிர் உரிமைத்தொகைக்கான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

Published : Jul 15, 2023, 06:04 PM IST
மகளிர் உரிமைத்தொகைக்கான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

சுருக்கம்

மகளிர் உரிமைத்தொகையை பெறுவதற்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பெரும்பாலான பெண்கள் உரிமைத்தொகை பெற முடியாத நிலை உள்ளதால் தளர்வுகள் வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது தந்தை தொல்காப்பியன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மண்டல வாரியாக அமைக்க வேண்டும்.

அதாவது  மேற்கு மாவட்டம், டெல்டா மாவட்டம் திருச்சி போன்ற மைய மாவட்டங்களில் இத்தகைய நூலகங்கள்  உலக தரம் வாய்ந்த நூலகங்களாக அமைவது படிக்கும்  இளம் தலைமுறைகளுக்கு மேலும் தங்களை வலிமைப்படுத்துவதற்கு, போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும் என அவர் கூறினார்.

காமராஜர் பிறந்தநாளில் அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு

மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள்  பயன்பெற வேண்டும்  என்ற அடிப்படையில் முதல்வர் அந்த வரையறைகளை வகுத்திருக்கலாம். அந்த வரையறைகள் பரிசீலனைக்கு உறியது என்று நான் கருதுகின்றேன். பொதுமக்களின் உணர்வுகளை மதித்து அதற்கு ஏற்ப அந்த வரையறைகளில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டு வர வேண்டும். திருத்தங்கள் மேற்கொள்வதற்கு  முதல்வர் முன் வரவேண்டும் என கூறினார்.

அதிநவீன ரயில் பெட்டிகளுடன் ஊட்டி மலை ரயில்; மத்திய இணை அமைச்சர் எல். முருகன் துவக்கி வைப்பு!!

மக்களின் கோரிக்கையில் இருந்து அரசு மற்றும் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். பொருளாதாரம் மட்டுமல்லாமல் பல அளவு கோளை வைத்திருக்கிறார்கள். அந்த அளவு கோலால்  பெரும்பாலான பெண்களுக்கு அந்த உரிமைத் தொகையை பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத  நிலையை ஏற்படுத்துவதாக கருதுகின்றனர். ஆகவே அவற்றில் சில தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என நான் முதல்வருக்கு  கோரிக்கை வைக்கிறேன் என கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!