சிறையில் இருந்ததால் பதவியை உதறி தள்ளியவர் காமராஜர். ஆனால், இன்றைக்கு அமைச்சர் பதவி இருந்தால்தான் தற்காத்துக் கொள்ள முடியும் என நினைத்து பதவியைக் கெட்டியாக பிடித்துள்ளனர்.
சிறையில் இருந்ததால் பதவியை உதறி தள்ளியவர் காமராஜர். ஆனால், இன்றைக்கு அமைச்சர் பதவி இருந்தால்தான் தற்காத்துக் கொள்ள முடியும் என நினைத்து பதவியைக் கெட்டியாக பிடித்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 20ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து சென்னை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, ராஜேஷ், கே.பி.கந்தன், விருகை ரவி, அசோக் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க;- இபிஎஸ் முதல்வராக இருந்த போது கொடநாடு சம்பவத்தில் தடயம் அழிக்கப்பட்டதா? டிடிவி. தினகரன் அதிர்ச்சி தகவல்.!
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஸ்டாலின் வாய்ஸாக ஓபிஎஸ் உள்ளார். கொடநாடு கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தியது அதிமுக ஆட்சியில் தான். எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென கேட்கிறோம்.
செந்தில் பாலாஜி வழக்கில் ஒரு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்ததால் பதவியை உதறி தள்ளியவர் காமராஜர். ஆனால், இன்றைக்கு அமைச்சர் பதவி இருந்தால்தான் தற்காத்துக் கொள்ள முடியும் என நினைத்து பதவியைக் கெட்டியாக பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க;- ED-ஐ பணி செய்யவிட்டால், மொரிஷியசில் இருக்கும் செந்தில் பாலாஜியின் பணத்தை கொண்டு வந்துடலாம் - அண்ணாமலை
விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவது ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லையா? டாஸ்மாக் அரசாக, சாராய மாடல் அரசாக திமுக உள்ளது. மக்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் டாஸ்மாக் அரசாக மாறி உள்ளது விடியா அரசு. டாஸ்மாக் வசூல் அனைத்தும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே செல்கிறது. விடியல் விடியல் என்று சொல்லிவிட்டு விடிந்த உடனேயே சாராயத்தை விற்க அரசு முயற்சிக்கிறது என ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.