மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சும்மா இருக்க மாட்டேன்.. எரிமலையாய் வெடித்த முதல்வர் ஸ்டாலின்.

Published : Jul 26, 2022, 03:06 PM ISTUpdated : Jul 26, 2022, 03:18 PM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சும்மா இருக்க மாட்டேன்.. எரிமலையாய் வெடித்த முதல்வர் ஸ்டாலின்.

சுருக்கம்

மாணவிகள் ஒரு போதும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்றும் அது போன்ற எண்ணங்களை கைவிட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

மாணவிகள் ஒரு போதும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்றும் அது போன்ற எண்ணங்களை கைவிட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் மாணவிகளுக்கு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தால் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இவ்வாறு எச்சரித்துள்ளார், இதேபோல் திருவள்ளூர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் மாணவிகளுக்கு முதல்வர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபகாலமாக பள்ளி மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அதில் பெரும்பாலும் மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை, மர்ம மரணம் போன்றவை தொடர்கதையாகி வருகிறது. இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இயங்கிவரும் குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவ்விழாவில் முதலமைச்சர் பேசிய விவரம் பின்வருமாறு:-

கொரோனா தொற்றால் தொண்டை பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் மக்கள் தொண்டு பாதிக்கக்கூடாது என்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன், குருநானக் கல்லூரியில் கலந்து கொள்வதற்கு மற்றவர்களைவிட எனக்கு எல்லா உரிமைகளும் உண்டு, 1971 இல் கல்லூரி தொடங்கப்பட்டபோது ஆட்சியில் இருந்தது திமுக தான், கல்லூரி அமைய 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிதான், அவர் அப்போது நிலம் ஒதுக்கியது இன்று வீண் போகவில்லை என்பதை குருநானக் கல்லூரி நிரூபித்துள்ளது. கலைஞர் தொடங்கிய எதுவுமே சோடை போனதில்லை, நான் சென்னை மேயராக இரண்டு முறை பொறுப்பு வகித்த போதும் குருநானக் கல்லூரி நடத்திய பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.

இதையும் படியுங்கள்: ஸ்ரீமதிக்காக போராட்டம்: ஆதி திராவிட இளைஞர்களை வீடு புகுந்த வேட்டையாடும் போலீஸ்.. கொந்தளிக்கும் வன்னி அரசு.

சிறுபான்மை இனமாக உள்ள சீக்கிய மக்கள் ஆற்றிவரும் கல்விப்பணி பெரும்பான்மையினரை விட மகத்தானது. இந்த கல்லூரியில் அனைத்து தரப்பு மக்களும் பயிலும் வகையில் சேவையாற்றி வருகிறது, அதேபோல் சமீபகாலமாக மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் தகவல்கள் வேதனை அளிக்கிறது,மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது, சமீப காலமாக நிகழ்ந்து வரும் சில நிகழ்வுகள் என்னை மிகுந்த மன வேதனை அடையச் செய்துள்ளது. கல்வி நிலையங்களில் பாலியல் புகார்கள் வந்தால் உடனே அதில் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு கல்வி நிறுவனத்தையும் வருமான  நோக்கத்தோடு நடத்தக்கூடாது. கல்வி நிறுவனத்தை தொழில் வர்த்தகமாக இல்லாமல் அதை தொண்டாக செய்யவேண்டும்.

எந்த காரணத்துக்காகவும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது, தற்கொலை என்ற முடிவை கைவிட வேண்டும், தற்கொலை முடிவு எதற்கும் தீர்வாகாது சோதனைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை மாணவர்கள் பெற்றிட வேண்டும், எந்தவிதமான தொல்லைகளையும் அவமானங்களையும் மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், தற்கொலை எண்ணம் கூடவே கூடாது, தலைநிமிரும் எண்ணம் தான் இருக்க வேண்டும், உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை ஒருபோதும் கூடாது, உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை. தமிழ்நாட்டு மாணவ மாணவியர் அறிவுக்கூர்மை கொண்டவர்களாக மட்டுமல்லாமல், உடல் உறுதியும் மன உறுதியும் கொண்டவர்களாக வளர வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தற்கொலை எண்ணத்திற்கு இடம் தராமல் சோதனைகளை சாதனைகளாக்கி வளரவேண்டும்.

இதையும் படியுங்கள்: பள்ளி கலவரத்துக்குக் காரணமானவர்கள் பட்டியலினத்தவர்களா..?உளவுத்துறை எவ்வாறு முடிவுக்கு வந்தது? அண்ணாமலை ஆவேசம்

இதுதான் என் எண்ணம் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தொல்லை தரக்கூடிய எந்த இழி செயல் நடந்தாலும் தமிழ்நாடு அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. உறுதியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும். இவ்வாறு முதல்வர் பேசினார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!