சோனியாவிடம் மீண்டும் விசாரணை! எதிர்ப்பு தெரிவித்து மகாத்மா காந்தியின் வழியில் சென்னையில் சத்தியாகிரக போராட்டம்

Published : Jul 26, 2022, 01:51 PM ISTUpdated : Jul 26, 2022, 01:53 PM IST
சோனியாவிடம் மீண்டும் விசாரணை! எதிர்ப்பு தெரிவித்து மகாத்மா காந்தியின் வழியில் சென்னையில் சத்தியாகிரக போராட்டம்

சுருக்கம்

நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்திருக்கும் அமலாக்க துறையை கண்டித்து சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மகாத்மா காந்தியின் வழியில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்திருக்கும் அமலாக்க துறையை கண்டித்து சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மகாத்மா காந்தியின் வழியில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள 'யங் இந்தியா' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்துள்ளதாக, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி 2013ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, சோனியா காந்தி மற்றும் ராகுலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி கடந்த மாதம் ஆஜரான ராகுலிடம் 5  நாட்களில் 50 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க;- sonia gandhi ed: சோனியா காந்தியிடம் 2-வது முறையாக அமலாக்கப் பிரிவு இன்று விசாரணை: டெல்லியில் 144 தடை உத்தரவு

இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்தி அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. புதிய சம்மனை ஏற்று அவர் கடந்த 21ம் தேதி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் மகளும் பொதுச் செயலருமான பிரியங்கா உடன் சென்றார். அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர். 

இதனிடையே, சோனியா மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்படி இன்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா ஆஜரானார். அவருடன் மகள் பிரியங்காவும் உடன் சென்றார். சோனியாவிற்கு அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். 

இதையும் படிங்க;- மக்களவையில் அமளி… ஜோதிமணி உள்பட 4 பேர் சஸ்பெண்ட்… அவைத் தலைவர் அதிரடி!!

இந்நிலையில், சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்திருக்கும் அமலாக்க துறையை கண்டித்து, சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில், மகாத்மா காந்தியின் வழியில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதற்கு, தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிராகவும், அமலாக்கத்துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்
நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்