ஸ்ரீமதிக்காக போராட்டம்: ஆதி திராவிட இளைஞர்களை வீடு புகுந்த வேட்டையாடும் போலீஸ்.. கொந்தளிக்கும் வன்னி அரசு.

By Ezhilarasan BabuFirst Published Jul 26, 2022, 1:52 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாணவிக்கு ஆதரவாக போராடியதாக கூறி ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் நுழைந்து மாணவர்கள் இளைஞர்களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர் என்றும்,  இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகளை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வலியுறுத்தியுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாணவிக்கு ஆதரவாக போராடியதாக கூறி ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் நுழைந்து மாணவர்கள் இளைஞர்களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர் என்றும்,  இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகளை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வலியுறுத்தியுள்ளார். பள்ளி நிர்வாகத்தின் உறவினர்கள் ஆதிதிராவிட இளைஞர்களை அவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று அடையாளம் காட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்தார். மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் அமைதியான முறையில் அறவழியில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென கடந்த 17ஆம் தேதி அது வன்முறையாக வெடித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாதி மத அடையாளம் கடந்து பள்ளி வளாகத்தில் திரண்டு அப்பள்ளிக்கூடத்தை தாக்கியதுடன், அங்கிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கினர். அப்போது காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு நடந்தது, அதில் 50க்கும் அதிகமான போலீசார் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு  எச்சரித்திருந்தார். இந்நிலையில் மாணவிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 5க்கும் மேற்பட்டோர் கைகள் உடைக்கப்பட்டுள்ளது, ஆனாலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது, இந்நிலையில் ஆங்கில நாளேடு ஒன்று உளவுத்துறை தகவலை மையமாக வைத்து அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டப் பின்னணியில் ஆதிதிராவிடர்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: பள்ளி கலவரத்துக்குக் காரணமானவர்கள் பட்டியலினத்தவர்களா..?உளவுத்துறை எவ்வாறு முடிவுக்கு வந்தது? அண்ணாமலை ஆவேசம்

உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைத்ததை போல அவர்களது செய்தி அமைந்துள்ளது. இந்நிலையில்தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி வலாகம் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் பல ஆதிதிராவிடர்  குடியிருப்புகளில்  உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்றும், இது உளவுத்துறையின் சதி என்றும், உளவுத்துறையில் உள்ள சாதி வாதிகளின் சதி என்றும் அவர் எச்சரித்துள்ளார். மாணவியின் நீதிக்கான போராட்டத்தை சாதி போராட்டமாக திசை திருப்ப முயற்சி நடக்கிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதையும் படியுங்கள்:  கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. உளவுத்துறையில் சாதிய வாதிகள்.. விசிகவுக்கு எதிரான சதி.. அலறும் திருமா.!

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் போராட்டப் பின்னணியில் ஆதிதிராவிட சமூகத்தினர்தான் இருக்கிறார்கள் என உளவுத்துறை எதைவைத்து முடிவுக்கு வந்தது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்? இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னிஅரசு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஸ்ரீமதிக்காக நடந்த மக்கள் போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் துடிக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விவரம் பின்வருமாறு:-

 

எனும் கோரிக்கையோடு நடைப்பெற்ற மக்கள் போராட்டத்தை
சாதி போராட்டமாக மாற்ற துடிக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம்.
ஆதிதிராவிடர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி பள்ளியை பாதுகாக்க துடிக்கிறது.
60 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட இளைஞர்களை காவல்துறை கைது (1)

— வன்னி அரசு (@VanniArasu_VCK)

ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் எனும் கோரிக்கையோடு நடைபெற்ற மக்கள் போராட்டத்தை சாதிப் போராட்டமாக மாற்றத் துடிக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம். ஆதிதிராவிடர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி பள்ளியை பாதுகாக்க துடிக்கிறது, 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது, இன்னும் தேடுதல் வேட்டை தொடர்கிறது, பள்ளி நிர்வாகத்தின் உறவினர்கள் மூலமாக ஆதிதிராவிட குடியிருப்புக்குள் புகுந்து படித்த மாணவர்களை அடையாளம் காட்டி வருவதாக தம்பிகள் அச்சத்தோடு தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஸ்ரீமதிக்கு ஆதரவாக போராடுவது தவறா? கைது செய்யப்பட்ட ஆதிதிராவிடர் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் நடத்தப்படும் தேடுதல் வேட்டையை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

click me!