வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமாக வரக்கூடாது.. வாக்காளர்களுக்கு கையுறை.. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி.!

By vinoth kumarFirst Published Mar 8, 2021, 5:41 PM IST
Highlights

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். 

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். 

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 19ம் தேதி முடிவடைகிறது. சனி, ஞாயிறு கிழமைகளில் வேட்புமனு தாக்கல் கிடையாது. வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் செல்ல இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். சுமார் 50 சதவீத வாக்குப்பதிவு மையங்கள் வெப் கேமரா கண்காணிப்பில் கொண்டுவரப்படும். 

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும். தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 4.97 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 76 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும். வாக்களிக்கும்போது வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!