அடுத்த 2 வாரம் இதே மாதிரி ஒத்துழைப்பு கொடுங்க.. கொரோனாவை ஓட ஓட அடிக்கலாம்.. அதிரடி காட்டும் ராதாகிருஷ்ணன்.

By Ezhilarasan BabuFirst Published Feb 1, 2022, 12:02 PM IST
Highlights

தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவர்கள் இலக்கு உள்ள நிலையில் 77% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவர்கள் இலக்கு உள்ள நிலையில் 77% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை அசோக்நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் பாதிப்பின்றி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படுகிறது. மணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்த்து உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நோய்க்கட்டுப்பாட்டு பகுதியிகிருந்து மணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அப்ப்குதியில் பள்ளிகள் இயங்காது என கூறினார். தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவர்கள் இலக்கு உள்ள நிலையில் 77% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2.5 லட்சம் இலக்கு உள்ள நிலையில் 1.80 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இடவசதி இல்லாத பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் இடவசதி இல்லாத பள்ளிகளில் 3 நாட்கள் கழித்து தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியக்கூடாது. ஆனால் மற்ற குழந்தைகளுக்கு விழிப்புணர்வு உள்ளது. முகக்கவசம் போட சவாலாக இருக்கும் போது தனி இடத்தில் வந்து தளர்வு படுத்திக்கொள்ளலாம். அடுத்த 2 வாரம் கவனக்குறைவாக இருக்க கூடாது என்றும் ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய் தொற்று குறைந்து வருகிறது.  நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 4% பேர் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளனர். அடுத்த 2 வாரம் இதே அளவு ஒத்துழைப்பும் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். 30 விழுக்காட்டிலிருந்து 10 - 12% வரை நோய் தொற்று பரவல் குறைந்துள்ளது என கூறினார்.
 

click me!