இது ஜனநாயகத்துக்கு எதிரானது.. ஆளும் கட்சிக்கு எதிராக அதிமுக திடீர் வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

Published : Feb 01, 2022, 10:58 AM IST
இது ஜனநாயகத்துக்கு எதிரானது.. ஆளும் கட்சிக்கு எதிராக அதிமுக திடீர் வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

சுருக்கம்

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கடந்த 29-ம் தேதி பல்வேறு இடங்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரணைக்கு வர உள்ளது.

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கடந்த 29-ம் தேதி பல்வேறு இடங்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு இதுபோல ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் விதிகளை மீறி சட்டவிரோதமாக ஆளும் கட்சியினர் செயல்படுவதற்கு வசதியாக இந்த அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது.

 இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே இந்த அதிகாரி இடமாற்றம் செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரன் பண்டாரி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நவீன் மூர்த்தி ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!