" கொரோனா நோயாளிகளை கட்டி பிடிச்சவன் நான்" .. அடங்க மறுக்கும் போலீ சித்த மருத்துவர் தணிகாச்சலம்.

Published : Feb 01, 2022, 10:42 AM IST
" கொரோனா நோயாளிகளை கட்டி பிடிச்சவன் நான்" .. அடங்க மறுக்கும் போலீ சித்த மருத்துவர் தணிகாச்சலம்.

சுருக்கம்

உலகமே கொரோனாவை கண்டு அஞ்சிய நிலையில், முதல் முதலாக கொரோனா நேயாளியை கட்டிப்படித்து வைத்தியம் பார்த்த ஒரே மருத்துவர் நான்தான். கொரோனா என்ற நோய் பரவிய உடன் அந்த நோய் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன், அது எப்படி பரவுகிறது. அதனால் என்ன பாதிப்பு ஏற்படும், என்பது முதலில் அறிந்து கொள்ள முடிவு செய்தேன், 

முதல் முறையாக கொரோனா நோயாளியை கட்டிப்பிடித்து வைத்தியம் பார்த்த ஒரே மருத்துவர் தான்தான் என போலி சித்த மருத்துவர் தணிகாசலம் தெரிவித்துள்ளார். உலகமே அந்த வைரஸை கண்டு அஞ்சி நடுங்கும் போது 3 ஆயிரத்து 500க்கும் அதிகமான நோயாளிகளின் தோள் மீது கைபோட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கிய நபர் தான் என அவர் கூறியுள்ளார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக போலியான தகவல் பரப்பினார் என்ற  குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலையாகி உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கடந்த 2019 ஆண்டு கொரோனா வைரஸ் வேகமாகப் பரவத்தொடங்கியது. அந்த வைரசார் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டபோது, அப்போது தமிழகத்தில் பிரபல சித்த மருத்துவராக அறியப்பட்ட திருத்தணிகாசலம் என்ற சித்த மருத்துவர் கொரோனா வைரசுக்கு மருத்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தனது மருந்தை உலக சுகாதார நிறுவனம், சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அதேநேரத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை  தனது மருந்தை நாடுமுழுவதும் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என அவர் வீடியோ வெளியீடு பரபரப்பை ஏற்படுத்தினார் கொரோனா மருந்து கண்டுபிடித்து விட்டதாக யாராவது போலியாக தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்தது. ஆனால் அதையெல்லாம் மீறி கொரோனா வைரசுக்கு தன்னிடம் மருந்து உள்ளதாகவும் தனக்கு 100 நோயாளிகளை கொடுத்தால் 5 நாட்களில் குணமாக்கி காட்டுவதாகவும் சவால் விடுத்தார். 

பல கார்ப்பரேட் மருந்து  கம்பெனிகளுடன் கைகோர்த்துக்கொண்டு அரசாங்கங்கள் தன்னை புறக்கணிக்கிறது என்றும், தான் சொல்லும் மருந்தை ஏற்க மறுக்கிறார்கள் என்றும் அழுதுகொண்டே வீடியோ வெளியிட்டார். அவரின் அந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்தது. தன்னை சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு முறையாவது சந்திக்க  அனுமதிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். ஏன் தணிகாசலத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் தமிழக அரசு சந்திக்க மறுக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது அப்போதைய தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரம், பதிவோ இல்லாதவர்தான் தணிகாச்சலம் என்று அவரது உண்மை நிலை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. பொது மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தணிகாசலத்தின் மீது சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதை அடுத்து போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது எழுந்த அடுக்கடுக்கான புகார்களை அடுத்து ஓராண்டுக்கு பிணையில் வெளிவர முடியாத வகையில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது. இந்நிலையில் கொரோனா மருந்து தொடர்பாக தன் மத்திய அரசின் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்தது தொடர்பாக மற்றும் சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-  25 ஆண்டுகளாக மருத்துவராக முறையாக அரசால் அங்கீகரிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தேன். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அனைத்து சேனல்களிலும் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பாகி இருக்கிறது. பல மத்திய அமைச்சர்கள் என்னிடம் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இந்நாள், முன்னாள் மத்திய அமைச்சர்களும் என்னிடம்  பேஷன்ட் ஆக இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நான் நல்ல வைத்தியராகதான் அவர்களுக்கு தெரிந்தேன். ஆனால் இப்போதுதான் போலி வைத்தியர் என முத்திரை குத்தப்பட்டிருக்கிறேன்.

உலகமே கொரோனாவை கண்டு அஞ்சிய நிலையில், முதல் முதலாக கொரோனா நேயாளியை கட்டிப்படித்து வைத்தியம் பார்த்த ஒரே மருத்துவர் நான்தான். கொரோனா என்ற நோய் பரவிய உடன் அந்த நோய் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன், அது எப்படி பரவுகிறது. அதனால் என்ன பாதிப்பு ஏற்படும், என்பது முதலில் அறிந்து கொள்ள முடிவு செய்தேன், அதனால் சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை வந்த நபரை பார்த்து கட்டிப்பிடித்து  அந்த வைரசை நான் பெற்றுக் கொண்டேன். பின்னர் பாதிக்கப்பட்டவருக்கு எனது மருந்து கொடுத்து சிகிச்சை வழக்கிக் கொண்டே நானும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அடுத்த ஒரு வாரத்தில் இருவரும் குணமடைந்தோம். உலகமே இந்த வைரசை பாரித்து நடுங்கிக் கொண்டிருந்த காலம் அது, அதற்கு மருந்தே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது நேரடியாகவே அந்த வைரசின் தாக்கத்தை உணர்ந்து அதற்கு சிகிச்சை வழங்கியவன் நான். 

இதுவரை கிட்டத்தட்ட 3500க்கும் அதிமாக நேயாளிகளின் தோல்மீது கைப்போட்டு அவர்களுடன் நெருங்கி பழகி அவர்களுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன். மற்றவர்களை போல அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவியதில்லை, மற்றவர்களை போல சானிடைசர்களை வைத்து கை குழுவியதில்லை, எனது மனைவி கர்பமாக இருந்தபோது என்னுடன் சேர்ந்து நோயாளிகளுக்கு சகஜமாக மருந்து கொடுத்திருக்கிறார். அப்படி இருந்தும் பிரசவத்திற்கு முந்தையநாள் வரை எடுக்கப்பட்ட டெஸ்டில் கூட அவருக்கு கொரோனா தொற்று நெகடிவ், எனக்கு எனது பிள்ளைகளுக்கும் நெகடிவ்தான் வந்தது. ஆக இந்த நோய் தொடுவதால் பரவாது, இது காற்று மூலம் பரவுகிற நோய். எனது பிள்ளைகள் கொரோனா நோயாளிகளுடன்தான் விளையாடுவார்கள் அவர்களுக்கு வைரஸ் தொற்று வரவில்லை. மொத்த த்தில் இப்போது நடந்து கொண்டிருப்பது அத்தனையும் பொய். உண்மையை வெளிப்படையாக பேசி பிரச்சனையில் அகப்பட்டுக் கொள்ள வேண்டாம் என்பதனால்தான் இத்தனை நாட்கள் எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்க வில்லை என அவர் கூறியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!