ட்விட்டரில் மட்டும் தான் காங்கிரஸ் கட்சி இருக்கு.. களத்தில் காணோம் - கலாய்த்த குலாம்நபி ஆசாத்

By Raghupati R  |  First Published Sep 4, 2022, 9:23 PM IST

காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகிய நிலையில் அவருக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்டவர்கள் சிலர் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகிய நிலையில் மீண்டும் சிலர் விலகத் தொடங்கியுள்ளனர்.கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் கடும் தோல்வி, 2014 மற்றும் 2022க்கு இடையில் நடந்த 49 சட்டமன்றத் தேர்தல்களில் 39ல் தோல்வியடைந்தது ஆகியவை காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டு வந்தது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..ரசிகர்களை சந்திக்கும் ரஜினி..அரசியல் பிளானும் இருக்கும் போலயே - ஜெயிலர் டூ அரசியல்.!

இந்நிலையில், இந்திய அரசியலின் மிக மூத்த தலைவர்களை தங்களகத்தே கொண்டிருப்பது மட்டுமே கட்சியின் பெரும் பலமாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த மூத்த தலைவர்களில் பலர் ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். இது காங்கிரஸ் தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. 

இந்நிலையில் ஜம்முவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குலாம்நபி ஆசாத் கலந்து கொண்டார். அப்போது, ‘காங்கிரஸ் நம் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. கணினியால் அல்ல. டுவிட்டரால் அல்ல. ஆனால் காங்கிரஸ் அணுக்கள் கணினிகள் மற்றும் ட்வீட்களில் மட்டுமே உள்ளது. அதனால்தான் காங்கிரஸை களத்தில் எங்கும் காண முடியவில்லை.

மேலும் செய்திகளுக்கு..Cyrus Mistry : டாடாவின் வாரிசு முதல் டாடா சன்ஸை நீதிமன்றத்துக்கு இழுத்தவர் வரை.! யார் இந்த சைரஸ் மிஸ்திரி ?

எனது கட்சி முழு மாநில அந்தஸ்து, நிலம் மற்றும் பூர்வீக குடியேற்ற உரிமையை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும். எனது கட்சிக்கான பெயரை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்கள் கட்சியின் பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எனது கட்சிக்கு இந்துஸ்தானி பெயரைச் சூட்டுவேன்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!