பி.டி.ஆர் ஆடியோ வெளியிட்ட விவகாரம்... டிவிட்டரில் அண்ணாமலையை சாடிய காயத்ரி ரகுராம்!!

By Narendran S  |  First Published Apr 26, 2023, 12:13 AM IST

பிடிஆர் பேசிய ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலை குறித்து காயத்ரி ரகுராம் டிவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 


பிடிஆர் பேசிய ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலை குறித்து காயத்ரி ரகுராம் டிவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில் உதயநிதியும் முதல்வரின் மருமகன் சபரீசனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய இரண்டாவது ஆடியோவையும் அண்ணாமலை வெளியிட்டார். அதில், நான் அரசியலுக்கு வந்தது முதல் ஒரு நபர் ஒரு பதவி என்கிற கொள்கைக்கு ஆதரவு அளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயமே இதுதான்.   கட்சியை பார்த்துக் கொள்வது மக்களை பார்த்துக் கொள்வது என்று இரண்டு பொறுப்புகளும் பிரிந்து இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: பூசி மெழுகப் பார்க்கும் கையாலாகாத அரசு... விஏஓ லூர்து மரணம் குறித்து அண்ணாமலை ஆவேசம்

Latest Videos

ஆனால் இங்கே எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் எடுக்கிறார்கள். நிதி மேலாண்மை செய்வது எளிது. அவர்களுக்கு வரும் ஊழல் பணம் மொத்தத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருமகனும் தான் இங்கே கட்சி மொத்தமும். அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள். இதனால் கடந்த எட்டு மாதங்களாக நான் பார்த்து பிறகு ஒரு முடிவு செய்து விட்டேன். இதில் எனக்கு இருக்கும் பெரும் வசதி என்னவென்றால் இப்போது நான் விலகினால் கூட இந்த குறுகிய காலத்தில் நான் வெளியேறினால் அவர்கள் செய்தது அனைத்தும் அவர்களுக்கே திருப்பி அடிக்கும். நான் இந்த யுத்தத்தை மிக விரைவில் கைவிட்டதாக என் மனசாட்சி சொல்லாது என்று கருதுகிறேன். நான் அந்த பதவியில் இல்லாத போது அதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது மேலும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாளை விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்!!

இந்த ஆடியோ முதலில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கரிடம் தான் இருந்ததாகவும் அதனை அண்ணாமலை வாங்கி ஆடியோவை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் வெளியிட்டதாகவும் அண்ணாமலையே கூறியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை சவுக்கு சங்கருக்கு கீழ் வேலை செய்கிறாரா என காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், சவுக்கு சங்கர் அண்ணா, அண்ணாமலை உங்களுக்கு கீழ் வேலை செய்கிறாரா? அண்ணாமலை ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆலோசகராகச் சேர்ந்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆடியோ வீடியோ கசிவு மற்றும் சோர்ஸில் உங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கிறார்.  சவுக்கு ஷங்கர் சகோ. அண்ணாமலையை ப்ரோமோட் செய்து உங்கள் நிறுவனத்தில் 200 போனஸ் கொடுங்கள், அதாவது அவர் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்தால் என்று தெரிவித்துள்ளார். 

click me!