தூத்துக்குடியில் விஏஒ கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் விஏஒ கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி முறப்பநாடு கிராம விஏஒ லூர்து பிரான்ஸிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் கடத்தல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், இன்று லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அரிவாளுடன் உள்ளே புகுந்த இருவர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: டெண்டர் விடப்பட்டதில் அதிமுக ஆட்சியில் முறைகேடு... புள்ளி விவரத்தோடு குற்றச்சாட்டிய மா.சுப்ரமணியன் !!
இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து கருத்து தெரிவித்த அவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இது போன்ற தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதை சுட்டிக்காட்டி இவ்வரசை சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன்.
இதையும் படிங்க: 1.5 லட்சம் கோடியைச் சுருட்டிய கமிஷன் கட்சி பாஜக! பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
அதற்கு இவ்வரசு பாராமுகமாய் இருப்பது மட்டுமில்லாமல் மக்கள் மீதும் அரசு அதிகாரிகளின் மீதும் எந்த அக்கறையும் இன்றி இருப்பது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. ஒரு அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால் பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? நாடக அரசியலை மட்டுமே கவனம் செலுத்தும் இந்த விடியா அரசின் முதல்வர் இனியாவது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திட்டவட்டமாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.