ராணுவ வீரர் கொலை.! தனக்கு ஏற்பட்ட கெட்டப் பெயரை மறைக்கவே அண்ணாமலை போராட்ட அறிவிப்பு- சீண்டும் காயத்ரி ரகுராம்

By Ajmal Khan  |  First Published Feb 16, 2023, 11:27 AM IST

தமிழக பாஜக தலைவரின் தவறான செயல்களை மறைக்க இந்த பிரச்சினையை போராட்டத்திற்கு பயன்படுத்துவது தவறானது என பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
 


மோதலில் ராணுவ வீரர் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைசேர்ந்தவர் மாதையன். இவரது மகன்கள் பிரபாகரன் (31). பிரபு (28). இருவரும் ராணுவ வீரர்கள். கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தொட்டி அருகே துணி துவைத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி, பிரபாகரனை கண்டித்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரரை சின்னசாமி தரப்பினர் ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் பிரபு உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் உயிர் இழந்தார். இதனையடுத்து இவ்வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீஸார் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னசாமி, புலிபாண்டி, காளியப்பன் ஆகியோரை கைது செய்தனர். ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

சட்டம் ஒழுங்கு எக்கேடு போனால் எனக்கென்ன இருக்கும் முதல்வர்! எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்காங்க! அண்ணாமலை

முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக கவுன்சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் திரு பிரபுவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக பாஜகவின் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர், ராணுவ பேட்ஜ் மற்றும் தொப்பி அணிந்து, நமது ராணுவத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்குக் காரணமான திமுக அரசைக்கண்டித்துப் போராட்டம் நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

கண்டித்துப் போராட்டம் நடத்துவார்கள். Ex-Servicemen பிரிவைச் சேர்ந்தவர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன், நாளை போராட்டம் நடத்துவார்கள். சார்பில், Ex-Servicemen பிரிவின் தலைவர் Lt. Col ராமன், திரு பிரபுவுக்கு அஞ்சலி செலுத்துகிறார். (2/3)

— K.Annamalai (@annamalai_k)

 

மேலும் ராணுவ வீரர்களுக்குக் கூட பாதுகாப்பில்லாத மோசமான திமுக கட்சியின் ஆட்சிக்கு எதிராக, அடுத்த சில நாட்களில் போர் நினைவிடத்தில் நடத்தப்பட உள்ள போராட்டத்தில் இணைய, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களையும் அழைக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

வேட்டி கட்டிய, மீசை வைத்த தலைவராக இருந்தால் தேர்தலை நேர்மையாக சந்தியுங்கள்- ஸ்டாலினுக்கு சவால் விடும் இபிஎஸ்

கெட்டப்பெயரை மறைக்க போராட்டம்

தமிழக பாஜக தலைவரின் தவறான செயல்களை மறைக்க இந்த பிரச்சினையை போராட்டத்திற்கு பயன்படுத்துவது தவறானது. ராணுவ வீரர் திரு பிரபுவை கொன்ற கும்பல் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு தமிழக காவல்துறைக்கு நன்றி  தெரிவித்துள்ளார். மேலும் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழக பாஜக தலைவரின் தவறான செயல்களை மறைக்க இந்த பிரச்சினையை போராட்டத்திற்கு பயன்படுத்துவது தவறானது.
ராணுவ வீரர் திரு பிரபுவை கொன்ற கும்பல் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி .
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
இப்போ அதை அரசியலாக்குவது தவறு.1/2

— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram)

 

1 கோடி ரூபாய் இழப்பு வழங்கிடுக

இப்போ அதை அரசியலாக்குவது தவறு. குடும்பத்திற்கு அரசு வேலையும், அவரது மனைவி பிரியா மற்றும் குழந்தைக்கு 1 கோடி இழப்பீடும் தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். ஆனால் ஒட்டுமொத்த குண்டர்களும் சுதந்திரமாக இயங்குகிறார்கள், தமிழகத்திற்கு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு கடுமையா இருக்க வேண்டும். தேசிய செய்தி சேனல்களில் அண்ணாமலை பேச வேண்டும், தனது கெட்டப் பெயரைத் மறைக்கவே, இந்த சம்பவத்தை எடுத்து 5 நாட்களுக்குப் பிறகு தேசிய சேனல்களில் கொண்டு வந்துள்ளார்.. தவறு.. போலீஸ் தேவையானதைச் செய்கிறது. காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மீது எல்லாம் பழி சுமத்துவது தவறு என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

திமுக கவுன்சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரர்... கண்டனம் தெரிவித்து இன்று தமிழக பாஜக போராட்டம்!!

click me!