Latest Videos

சூடு பிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.!முதியவர்களிடம் தபால் வாக்கு பதிவை தொடங்கிய தேர்தல் ஆணையம்

By Ajmal KhanFirst Published Feb 16, 2023, 10:20 AM IST
Highlights

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய  முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பதிவு செய்வதை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 

ஈரோடு இடைத்தேர்தல்-பிரச்சாரம் தீவிரம்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இதன் காரணமாக அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு களம் இறங்குகிறார். இதே போல நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இதனையடுத்து தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து திமுக மற்றும் அதிமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். திமுக சார்பாக 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

வேட்டி கட்டிய, மீசை வைத்த தலைவராக இருந்தால் தேர்தலை நேர்மையாக சந்தியுங்கள்- ஸ்டாலினுக்கு சவால் விடும் இபிஎஸ்

தபால் வாக்குபதிவு தொடங்கியது

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தற்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு வாங்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 321 முதியவர்கள் மற்றும் 31 மாற்றுத் திறனாளிகளிடம் வாக்குப்பதிவு செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தபால் வாக்குப் பதிவு மொத்தம் 2 நாட்கள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.  இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் இரண்டாம் தேதி சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் (IRTT) வைத்து எண்ணப்பட இருக்கிறது. இதற்காக பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதையும் படியுங்கள்

அன்புஜோதி ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை.! மாயமான 14 பேர் நிலை என்ன.? முக்கிய நபரை அலேக்கா தூக்கிய போலீஸ்

click me!