சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், திமுகழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான திருமதி. ஷீபா வாசு அவர்கள் இன்று (16-02-2023) அதிகாலை உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்திகேட்டு மிகவும் வருந்தினேன்.
சென்னை மாநகராட்சி 122வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான ஷீபா வாசி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் 122வது வார்டில் போட்டியிட்டு 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் ஷீபா வாசி வெற்றி பெற்றார். மாநகராட்சி மேயர் வேட்பாளர் ரேஸில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ஷீபா வாசி காலமானார். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை சுமார் 5 மணியளவில் ஆஸ்டின் நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு நந்தனம் ஒய்.எம்.சி.எ வில் உள்ள கல்லரையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், திமுகழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான திருமதி. ஷீபா வாசு அவர்கள் இன்று (16-02-2023) அதிகாலை உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்திகேட்டு மிகவும் வருந்தினேன்.
undefined
மக்கள் பணியாளராகவும், கழகத்தின் செயல்வீரராகவும் இருந்து சிறப்புறப் பணியாற்றி வந்த அவரது மறைவு பெரிதும் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், 122-ஆவது வார்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இயக்கத்திற்காக தன் குடும்பத்தில் உள்ள ஓவ்வொருவரையும் அர்பணித்து
பணியாற்றி வந்தவரும், கழகதலைவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும், கொண்ட
தலைமை செயற்குழு உறுப்பினரும், 122 வது மாமன்ற உறுப்பினருமான திருமதி ஷீபாவாசி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமடைய
செய்கிறது . pic.twitter.com/3TrlQwEkg8
அதேபோல், திமுக எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான மயிலை வேலு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இயக்கத்திற்காக தன் குடும்பத்தில் உள்ள ஓவ்வொருவரையும் அர்பணித்து பணியாற்றி வந்தவரும், கழகதலைவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும், கொண்ட தலைமை செயற்குழு உறுப்பினரும், 122 வது மாமன்ற உறுப்பினருமான திருமதி ஷீபாவாசி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமடைய செய்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.