கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை… பள்ளிக்கு வேண்டப்பட்ட கும்பல் தான் செய்தது… வேல்முருகன் அதிரடி!!

By Narendran SFirst Published Aug 4, 2022, 8:49 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையில் பள்ளிக்கு வேண்டப்பட்ட கும்பலே வாகனங்களை எரித்து இருக்கலாம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையில் பள்ளிக்கு வேண்டப்பட்ட கும்பலே வாகனங்களை எரித்து இருக்கலாம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் மாணவியின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இது பெரும் போராட்டமாக மாறியதை அடுத்து பள்ளி வாகனம் எரிக்கப்பட்டதுடன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இதுத் தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சகோதரி இறந்திருக்கிறார். அதற்கான நீதிகேட்டு அமைதியான வழியில்தான் போராடினார்கள். அனைவரையும் தமிழ்நாடு முதலமைச்சர் விடுவிக்க உத்தரவிட வேண்டும். பேருந்தை எரித்ததாக சொன்னீர்கள். அதை இன்சூரன்சில் வாங்கிக்கொள்ளலாம். பெஞ்சுகளை எடுத்துச் சென்றதாக கூறினீர்கள். அதையும் திருப்பி தந்துவிட்டார்கள். இப்போது மாணவியை உயிருடன் கொண்டு வந்து விட முடியுமா? மனிதநேய அடிப்படையில் அரசு உயரதிகாரிகள் அணுக வேண்டும். 66 பேருந்துகள் பள்ளியில் நின்றது. 6 பேருந்துகளை எரித்ததாக சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதிக்கு மனு... இது கீழ்தரமானசெயல் என ஓபிஎஸ் தரப்பை கண்டித்த நீதிபதி.

மீதமுள்ள 60 பேருந்துகள் எங்கு சென்றன? ஏதோ காயலான் கடை பேருந்தை கொண்டு வந்து நிறுத்தி உள்ளே இருந்த ஆட்களே அடித்து உடைத்திருக்கிறார்கள். பேருந்து சாவி, டிராக்டர் சாவி யாரிடம் இருந்தது? அது மாணவி மரணத்துக்கு நீதி கேட்டவர்கள் செய்த காரியமல்ல. பள்ளிக்கு வேண்டப்பட்ட கும்பல் செய்திருக்கலாம். அந்த கோணத்திலும் காவல்துறை விசாரிக்க வேண்டும். பாவம் சாலையில் சென்றவர்கள், நீதி கேட்க வந்தவர்கள் எல்லோரையும் கைது செய்து 17 பிரிவுகளில் வழக்குப்பதிவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் மாணவர்களாக இருந்தால் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை அணுகி உடனடியாக விடுவிக்க வேண்டும். ஒரு மாணவியின் உயிர் அவ்வளவு எளிதானதல்ல. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நீதியின் பக்கம் நிற்க வேண்டும். உங்களை மிரட்டுகிற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்புக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது? திறக்க மாட்டோம் என்று சொன்ன பள்ளிகளை அரசுடைமையாக்குங்கள் என்று தெரிவித்தார். 

click me!