சர்ச்சை பேச்சு விவகாரம்... தலைமறைவான கனல் கண்ணன்... எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு!!

By Narendran S  |  First Published Aug 4, 2022, 7:07 PM IST

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒருமாதகாலமாக இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கி நடைபெற்று வந்தது. அதன் நிறைவு விழா சென்னை அருகே நடைபெற்றது. அதில் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, இந்துவாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். வாலெடுத்து சண்டை போட்ட காலம் மாறி இப்போது மதமாற்றம் என்ற பெயரில் நாடு பிடிக்கிறார்கள். ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும்போது அங்கு ஒரு சிலை இருக்கிறது.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியில் உள்ள அந்த சிலை இருக்க கூடாது.. கனல் கண்ணன் பேசியதில் என்ன தவறு.. அண்ணாமலை.

Tap to resize

Latest Videos

அதில் கடவுள் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது. அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என்று தெரிவித்தார். அவரின் இந்த கருத்துக்கு திராவிட இயக்க ஆர்வலர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள கனல்கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று திராவிட இயக்க பற்றாளர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன்… 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!! 

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வன்முறை  தூண்டும் விதமாக பேசியது உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கனல் கண்ணன் தலைமறைவு ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கனல் கண்ணனை கைது செய்வதற்காக சென்னை மதுரவாயலில் உள்ள அவரது வீடு உள்பட மூன்று இடங்களில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 

click me!