எங்கிருந்தோ பறந்து வந்து… பிரான்சில் அதிபருக்கு நேர்ந்த ‘முட்டை’ சம்பவம்..

Published : Sep 28, 2021, 08:28 AM IST
எங்கிருந்தோ பறந்து வந்து… பிரான்சில் அதிபருக்கு நேர்ந்த ‘முட்டை’ சம்பவம்..

சுருக்கம்

பிரான்சில் அதிபர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரான்சில் அதிபர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக நாடுகளில் அந்தந்த நாட்டு தலைவர்கள் மீது மக்கள் என்ன தான் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தாலும் அதிருப்தியாளர்களின் நடவடிக்கைககள் சில சமயம் பெரிதாக பேசப்படும். அப்படித்தான் இப்போது பிரான்ஸ் நாட்டு அதிபருக்கு நேர்ந்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. லியோன் நகரில் உணவு வர்த்தக கண்காட்சி தான் அது. இந்த கண்காட்சியில் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டு இருக்கிறார். அவர் பாதுகாவலர்களுடன் நடந்து வந்து கொண்டு இருந்தார்.

அப்போது தான் எங்கிருந்தோ பறந்து வந்த முட்டை அதிபர் மீது விழுந்துள்ளது. மேக்ரான் தோளில் விழுந்த முட்டை பின்னர் கீழே விழுந்திருக்கிறது. எந்த திசையில் இருந்து முட்டை பறந்து வந்தது என்பதை கண்டறிந்து முட்டை வீசிய நபரை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் அதிபருடன் பேச வேண்டும் என்பதற்காக தான் முட்டை வீசினேன் என்று கூறி இருக்கிறார் அந்த நபர். ஆனாலும் அவரை விடாமல் கைது செய்து பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர். இதே மேக்ரானை ஒரு நபர் சில காலம் முன்பு கன்னத்தில் அறைந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்