எடப்பாடியாருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் சபாநாயகர் தனபால், கடம்பூர் ராஜூ..!

Published : Jun 27, 2022, 01:16 PM ISTUpdated : Jun 27, 2022, 01:20 PM IST
எடப்பாடியாருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் சபாநாயகர் தனபால், கடம்பூர் ராஜூ..!

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொது இடங்களில் செல்வோருக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொது இடங்களில் செல்வோருக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் 624, செங்கல்பட்டு 241, கோயம்புத்தூர் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியும் திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு.!

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்கள் அறிவுரைப்படி இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர். கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் எடப்பாடி பழனிசாமி  இல்லத்தில் நடந்த ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்..!

இதனையடுத்து, முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜூக்கு தொற்று உறுதியானதை அடுத்து எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு கணவர் செய்த வெறித்தனமான காரியம்.. மிரண்டு அதிர்ந்துபோன மக்கள்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!