அக்னிபத் வீரர்களுக்கு வரன் அமைவது கடினம்.. சர்ச்சையை கிளப்பிய மேகாலாயா ஆளுநர் சத்யபால் மாலிக்.

By Ezhilarasan BabuFirst Published Jun 27, 2022, 1:15 PM IST
Highlights

அக்னி 10 வீரர்கள் ராணுவத்தை இருந்து திரும்பிய பின்னர் அவர்களுக்கு வரன் அமைவது கடினம் என மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அக்னி 10 வீரர்கள் ராணுவத்தை இருந்து திரும்பிய பின்னர் அவர்களுக்கு வரன் அமைவது கடினம் என மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தை உலகில் நம்பர் ஒன் ராணுவமாக உயர்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது, அதேநேரத்தில் இளைஞர்களை அதிக அளவில் ராணுவத்தில் சேர்க்கும் நோக்கில் அக்னி பற்றி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

சமீபத்தில் இந்திய முப்படைகளில் குறுகியகால வீர்ரகளாக பணியமர்த்தும் வகையில் அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 13ஆம் தேதி அறிவித்தது. இதன்படி 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் ராணுவப் பணியில் சேர முடியும். 75 சதவீதம் பேர் நான்கு ஆண்டுகளுக்குப்பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பென்ஷன் கிடையாது, அந்த நான்கு ஆண்டுகளுக்கான செட்டில்மெண்ட் நிதி கிடைக்கும், அதுவும்கூட சொற்பத் தொகையே ஒரு வகையில் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இத்திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ராணுவ ஆட்சேர்ப்புக்கான முந்தைய நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக  தென் மாநிலங்கள் வட மாநிலங்கள் என  நாடுமுழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. வடமாநிலங்களில் இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்திற்கான மரியாதை இழக்கும் சூழல் உள்ளது என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபால் மாலிக்  கூறியதாவது, அக்னிபாத் என்பது முழுக்க முழுக்க தவறான திட்டம். இது ராணுவத்தின் கௌரவத்திற்கு எதிரானதே, இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ராணுவத்தில் மதிப்பு ஸ்திரத்தன்மை குறைந்துவிடும். இந்த வீரர்கள் வெறும்  நான்கு ஆண்டுகளில் பணி முடித்து ஓய்வுதியம் பெற்றுவிடுவார்கள்.

இவர்களுக்கு திருமண வரன்கள் அமைவது கடினம், எனவே அக்னிபத் திட்டம் இதனால் அவர்களுக்கு எதிராகவே இருக்கும். ஆகவே மத்திய அரசாங்கம் உடனடியாக இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், எனக்கு இந்த விவகார்த்தில் அரசியல் செய்து தேர்தலில் பங்கேற்கும் எண்ணமில்லை என்ற அவர், விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேவையான இடங்களில் போராடுவேன் என்றார். காஷ்மீர் குறித்து புத்தகம்  எழுதப் போவதாக அப்போது தெரிவித்தார்.

 

click me!