ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம்..! திமுகவை புகழ்வது கட்சிக்கு செய்யும் துரோகம்..! ஜெயக்குமார் காட்டம்

By Ajmal KhanFirst Published Jun 27, 2022, 1:03 PM IST
Highlights

ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் பதவியில் இருக்கிறாரா இல்லையா என்பது  ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் தெரியவரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலை நிர்வாகிகள் கூட்டம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவு செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் கூட்டம் நடைபெறுவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். அதையும் மீறி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை ஒருங்கிணைக்க சட்டத்திருத்தம் குறித்தும் கட்சியை வழிநடத்த குழு அமைப்பது குறித்தும் இன்று ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதிமுக தலைமை நிலைய செயலாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றதாகவும் 65 உறுப்பினர்கள் நேரில் கலந்து கொண்ட நிலையில் 5பேர் கடிதம் மூலம் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார்.

குடியரசு தலைவர் வேட்பாளர் பெயரை பாஜக அறிவித்ததும் முதலமைச்சருக்கு காய்ச்சல் வந்துவிட்டது- அண்ணாமலை கிண்டல்

ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம்

இந்தக் கூட்டத்தில் வருகிற 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட இருப்பதாகவும் இது குறித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் பேசிய பிற விவகாரங்கள் குறித்து  அனைத்தையும் தெரிவிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அதிமுகவின் சட்ட விதிகள் குறித்து சிவி சண்முகம் சுமார் 51 நிமிடம் முழுவதுமாக விளக்கம் அளித்த நிலையில் ஓபிஎஸ் அவர்கள் இந்தக் கூட்டம் செல்லாது என கூறுவது வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் தொடர்ந்து அவர் மேற்கொண்டு வந்த பல்வேறு செயல்கள் மூலம் அவர் துரோகத்தின் அடையாளம் ஆக இருப்பதாக தெரிவித்தார். அவரது மகன் ரவிந்திரநாத் குமார், தமிழக முதல்வரை சந்தித்து திமுக ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக கூறுவது அதிமுகவின் எதிரியை புகழ்வது கட்சிக்கு செய்யும் துரோகம் என தெரிவித்தார். இத்தகைய துரோக செயல்களை செய்த ஓபிஎஸ் அவர்களை நமது அம்மா பத்திரிகையில் எப்படி அவரது பெயரை போட முடியும் எனவும் தெரிவித்தார்.

பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..?அடுத்த அதிர்ச்சி கொடுக்க தயாராகும் இபிஎஸ் அணி

ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் இருக்கிறாரா?

ஓபிஎஸ் பொருளாளர் பதவியில்  இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் இது குறித்து அதிமுக பொது குழுவில் முடிவு தெரிய வரும் என தெரிவித்தார். திமுக கட்சி துரோக கட்சி என்றும் இலங்கை நடைபெற்ற போரில் சுமார் ஒன்றரை கோடி தமிழர்கள் மறைவுக்கு காரணமாக இருந்த கட்சி திமுக என்றும் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட நிலையில் சுயநலத்துடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அமைத்து திமுக செயல்பட்டதாக தெரிவித்தார். எனவே திமுக,அதிமுகவை குறை சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது எனவும் ஜெயக்குமார் விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிப்பு..! கட்டிட கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்


 

click me!