போதும்டா சாமி! இனி எனக்கும் பாஜகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை! விலகிய முக்கிய பிரமுகர்! என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jul 23, 2023, 8:09 AM IST

மணிப்பூர் பெண் குலத்துக்கு இழைக்கப்பட்ட இந்த மாதிரியான கொடூரம் எந்த வகையான பிற குற்றங்களுடனும் ஒப்பிடவே முடியாது. 


மணிப்பூர் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முன்னாள் எம்.பி. கண்ணன் பாஜகவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் அறவே இல்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்;- மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் நடந்தேறிய பெண்களுக்கு எதிரான மிகவும் அவமானகரமான செயல் இந்தியர்களை மட்டுமல்ல உலகமக்களின் மனசாட்சியை உலுக்கி மிகப்பெரிய கேவலமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். இந்த குரூரமான செயலுக்கு எந்தவிதமான சாக்கு போக்கும் சொல்லாமல் மணிப்பூர் மாநில அரசும் மத்திய அரசும் இந்த கொடூரத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு முடிந்தவரை அதை சீர்செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். மணிப்பூர் முதல்வரை  பதவி நீக்கம் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மணிப்பூரைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்த மேற்குவங்க சம்பவம்! ஒரு பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்!

மணிப்பூர் பெண் குலத்துக்கு இழைக்கப்பட்ட இந்த மாதிரியான கொடூரம் எந்த வகையான பிற குற்றங்களுடனும் ஒப்பிடவே முடியாது. ஏனென்றால் இந்த சம்பவம் பொதுமக்களுக்கு இரண்டரை மாதங்கள் கழித்து வீடியோ வைரலான பிறகுதான் எல்லோருக்கும் தெரியவந்தது. இந்த இரண்டரை மாதம் என்பது பல விசாரணைக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இந்த கொடுமையைக் கண்டிக்க எந்த வார்த்தையும் எனக்கு கிடைக்கவில்லை.

காட்டுமிராண்டித்தனமான, மனிதகுலத்துக்கு குறிப்பாக பெண்குலத்துக்கே இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி, கொடூரம், குரூரம். மனசாட்சியுள்ள யாரும் இதைக் கடுமையாக கண்டிக்காமல் இருக்க முடியாது. இது சம்மந்தமாக என்னுடைய கடுமையான கண்டனங்களை மத்திய பாஜக அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க;-  மணிப்பூரில் பெண்கள் மீது கொடூர பாலியல் தாக்குதல்! குஷ்பு, வானதி சீனிவாசன் எங்கே? பொங்கும் அமைச்சர் கீதாஜீவன்

அதிகாரபூர்வமாக இப்போது நான் அறிவிக்க விரும்புவது பாஜகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் அறவே இல்லை என்பதே. பொதுமக்களுக்கான எனது பணியும் போராட்டமும் என்றும் தொடரும் என்று கண்ணன் கூறியுள்ளார். 

click me!