சொல்றது ஒண்ணு.. செய்றது ஒண்ணா? இது எந்தவகையிலும் நியாயம்.. ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் டிடிவி.தினகரன்..!

By vinoth kumar  |  First Published Jul 23, 2023, 7:29 AM IST

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகை 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 


வாக்குறுதி அளித்ததைக் காட்டிலும் உதவித்தொகையை  ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகை 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது  திமுக வெளியிட்ட வாக்குறுதியில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித் தொகையை ரூ.1000- இல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பொய் வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- குட்நியூஸ்.. முதியோர், கைப்பெண்கள் உதவித்தொகை உயர்வு.. எந்த மாதத்தில் இருந்து தெரியுமா?

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி வழங்கி, வழக்கம்போல மக்களை ஏமாற்றும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன். 

இதையும் படிங்க;-  பழசையெல்லாம் மறந்துடாதீங்க ஈவிகேஎஸ் இளங்கோவன்.. பிளாஷ்பேக்கை சொல்லி டோட்டல் டேமேஜ் செய்த யுவராஜா..!

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது  திமுக வெளியிட்ட வாக்குறுதியில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித் தொகையை ரூ.1000- இல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பொய் வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி ரூ.1200 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி வழங்கி, வழக்கம்போல மக்களை ஏமாற்றும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட வாக்குறுதியில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித் தொகையை…

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

 

அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை தினந்தோறும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது அளிக்கப்பட்டு வரும் உதவித்தொகையே  போதாத போது முதியோர் மற்றும்  கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை ரூ.200 மட்டும் உயர்த்துவது எந்தவகையிலும் நியாயம் ஆகாது. எனவே வாக்குறுதி அளித்ததைக் காட்டிலும் உதவித்தொகையை  ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

click me!