அதிமுகவில் இணையும் அன்வர் ராஜா.. யார் அணியில் இணையப்போகிறார் தெரியுமா ? எடப்பாடியா? பன்னீரா?

By Raghupati R  |  First Published Sep 11, 2022, 9:40 PM IST

அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி பலத்த விமர்சனங்களைச் சந்தித்த காலகட்டத்தில், பாஜகவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார் அன்வர் ராஜா.


எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாள் முதலே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா. 1986-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில்தான் முதன்முறையாக வாய்ப்பளித்தார் எம்ஜிஆர். அதிமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த தேர்தல் அது. திமுக ஆதரவு அலை வீசிய அந்த உள்ளாட்சித் தேர்தலில், மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் அன்வர் ராஜா.

அடுத்து மதுரையில் நடந்த எம்ஜிஆர் மன்ற மாநாட்டில் அன்வர் ராஜாவை அழைத்துப் பேசவைத்த எம்ஜிஆர், அதிமுகவின் அதிகாரம் வாய்ந்த குழுக்களுள் ஒன்றான 15 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவில் அன்வர் ராஜாவையும் சேர்த்துக்கொண்டார். அவர்களில் 13 பேர் அமைச்சர்கள். அமைச்சர்கள் அல்லாத இருவர், அன்வர் ராஜாவும் ஜெயலலிதாவும் மட்டுமே.எம்ஜிஆரின் மறைவுப் பிறகு அதிமுக உடைந்தபோது ஜானகி எம்ஜிஆரின் பக்கம் நின்ற அன்வர் ராஜா. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !

1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஜானகி அணி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிறகு, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அதிமுகவில் சேர்ந்துகொண்டார். அதிமுகவில் இருக்கும் சிறுபான்மைச் சமூகத்து மக்களின் பிரதிநிதியாக இருந்த அன்வர் ராஜாவுக்கு, 2001 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாநில அமைச்சர் பதவி கிடைத்தது. தொழிலாளர் நலத் துறை அமைச்சராகச் செயல்பட்டார். 

அப்போது அமைச்சரவையை அடிக்கடி மாற்றுவது ஜெயலலிதாவின் பாணி. அதன்காரணமாக திடீரென அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா, பிறகு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் பக்கம் நின்றார். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எனும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார். 

அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி பலத்த விமர்சனங்களைச் சந்தித்த காலகட்டத்தில், பாஜகவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிப்பவர்களுள் ஒருவராக அன்வர் ராஜா இருந்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பேசிவந்த அன்வர் ராஜாவுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. 

மேலும் செய்திகளுக்கு..“60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?

ஆனாலும் அதிமுகவிலேயே தொடர்ச்சியாக நீடித்துவந்த அன்வர் ராஜா, திடீரென அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது என்றார். பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தரப்புக்கும் ஆதரவு கொடுக்காமல் தனியாக ஒதுங்கியே இருந்தார்.பிறகு இருவரும் சேர்ந்தே அவரை நீக்கினார்கள்.இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அன்வர் ராஜா.

அப்போது பேசிய அவர், ‘அதிமுக எழுச்சியுடன் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். இபிஎஸ் -ஓபிஎஸ் இணைந்திருந்த போது என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். மீண்டும் இணைந்தால் தான் என்னை கட்சியில் சேர்க்க முடியும். கட்சியில் இணைவதற்காக காத்திருக்கிறேன். அதிமுகவினரை இணைக்கவும் தயார். அதில் இணையவும் காத்திருக்கிறேன்.அதிமுக நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். ஒரு அவதாரம். அவரின் பக்தனாக தொடர்கிறேன்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்

click me!