திமுக அமைச்சர்கள் ஐ.டி.க்கும், அமலாக்கத்துறைக்கும் பயந்து இரவில் தூங்காமல் இருக்கின்றனர் - செல்லூர் ராஜூ

By Velmurugan s  |  First Published Jul 8, 2023, 1:27 PM IST

திமுக அமைச்சர்கள் வருமான வரித்துறையினருக்கும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் பயந்து இரவு தூக்கமின்றி இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.


மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுகவின் பல்வேறு திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து உள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

அதிமுகவில் இளைஞர்கள் அலை அலையாக சேர்ந்து வருகின்றனர். அதிமுகவின் மதுரை மாநாடு ஒரு வரலாறாக அமைய இருக்கிறது. கட்சி துவங்கிய காலத்தில் இது ஒரு நடிகரின் கட்சி  50 நாள் கூட நீடிக்காது என்று எல்லாம் பேசினார்கள் ஆனால் இன்று 50 ஆண்டுகள் நிறைவு செய்து தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சியாக பொன் விழா மாநாடு கொண்டாட இருக்கிறது. அதிமுக தொண்டர்களின் எழுச்சியோடு உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அதிமுக மாநாடு அமைய இருக்கிறது. தொகுதிக்கு 25 ஆயிரம் நபர்கள் வீதம் அதிமுக மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகிறோம். மதுரையில் மற்றொரு சித்திரை திருவிழா காண இருக்கிறோம்.

தற்பொழுது, வரை மதுரையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு உள்ளனர். தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் தக்காளியை மறந்து போய் உள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்திலும் காய்கறி விலை ஏற்றம் இருக்கும். ஆனால் அதனை சமாளிக்க முன்கூட்டியே திட்டம் வகுப்போம். இந்த அரசு கமிஷன், கரப்சன் என்பதை நோக்கியே உள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தூங்குவார்களா இல்லையா என தெரியவில்லை. எப்பொழுது அமலாக்கத்துறை வரும், ஐடி துறை வரும் என யோசித்துக்  பயந்து போய் இருக்கிறார்கள்.  முதல்வரும் குடும்பம் செந்தில் பாலாஜி வாய் திறந்து விடுவாரோ பயந்து போய் இருக்கிறது. 

பணம் தராவிட்டால் இலவச மின்சாரம் கிடையாது; அதிகாரிகளின் அடாவடி தனத்தால் கதி கலங்கும் நெசவாளர்கள்

மதுரையின் மைந்தனாக இருக்கக்கூடிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார் அவரை கண்டுபிடிங்கள். மக்கள் போட்ட பிச்சையால்தான் திமுகவினர் அமைச்சர், எம்.எல்.ஏ என பதவியில் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் பிச்சை போட்டோம் என அமைச்சர்கள் வாய் கொழுப்பாக பேசி வருகின்றனர். 

மதுரை பறக்கும் பாலத்தில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு பலி

திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு கொடுத்துவிட்டு தற்பொழுது குறிப்பிட்டு பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என மாற்றி அறிவித்துள்ளனர். இதேபோல்தான் அனைத்து திட்டத்திலும் செயல்படுத்தி வருகின்றனர். கூட்டுறவு வங்கியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கேட்டு வைத்த நகைகள் அனைத்து மூழ்கிப் போய்விட்டன.அதிமுக மட்டுமே ஜனநாயகத்தின் படி இயங்கும் ஒரே கட்சி. இங்குதான் ஏழை, பணக்காரன், சாதி, மத வேற்றுமை என எதுவும் கிடையாது. அனைவரும் உயர் பொறுப்புக்கு வர முடியும். குறிப்பாக  தனபால் சபாநாயகராக அமர்த்தப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

click me!